For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100வது பிறந்த நாள் கொண்டாடிய ஆஸ்திரேலிய கிளி: எலிசபெத் மகராணி வாழ்த்து!

Google Oneindia Tamil News

டாஸ்மானியா: ஆஸ்திரேலியத் தீவு ஒன்றில் அமைந்துள்ள சரணாலயத்தில் பராமரிக்கப்படும் கிளி ஒன்று தன்னுடைய 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட டாஸ்மானியா தீவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் 100 வயதான ஒரு கிளி பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அந்த கிளிக்கு சரணாலய ஊழியர்கள் ஒன்றிணைந்து பிறந்தநாள் கொண்டாடினர்.

100 வடிவிலான கேக்:

100 வடிவிலான கேக்:

100 என்ற வடிவத்தில் உருவாக்கப்பட்ட கேக்கில் மூன்று மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அதை அந்த கிளிக்கு பரிசாக அளித்தனர்.

எலிசபெத் மகராணியின் வாழ்த்து:

எலிசபெத் மகராணியின் வாழ்த்து:

எல்லாவற்றுக்கும் மேலாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து அந்த கிளிக்கு வாழ்த்து செய்தி வந்துள்ளது.

சரணாலய நிர்வாகிகள் தெரிவிப்பு:

சரணாலய நிர்வாகிகள் தெரிவிப்பு:

100 வயதான கிளி பற்றி ஏற்கனவே ராணியிடம் சரணாலய நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.

அதிகபட்சமே 70 தான்:

அதிகபட்சமே 70 தான்:

பொதுவாக, இந்த வகையைச் சேர்ந்த கிளிகள், வனத்தில் இருந்தால் 40 ஆண்டுகளும், சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டால் 70 ஆண்டுகளும்தான் அதிகபட்சமாக வாழும்.

 செஞ்சுரி போட்டு சாதனை:

செஞ்சுரி போட்டு சாதனை:

ஆனால், அதையும் தாண்டி, 100 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது இந்த கிளி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A friendly sulphur-crested cockatoo just reached a huge milestone — his 100th birthday. Fred was the bird of honor over the weekend at his home on a wildlife sanctuary in Tasmania where he was celebrated with a party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X