For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரான்ஸ் தேசிய தினம் கோலாகல கொண்டாட்டம்.. அந்தரத்தில் சீறிப்பாய்ந்த பறக்கும் சிப்பாய்

Google Oneindia Tamil News

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசிய தினத்தையொட்டி சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில் நடைபெற்ற கண்கவர் நிகழ்வில், அந்தரத்தில் பறந்து வந்து சாகசம் செய்த ராணுவ வீரரால் கூட்டத்தினர் அதிசயித்து வாய் பிளந்தனர்.

பிரெஞ்சு புரட்சியின் அடையாளமான தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி, ராணு வீரர்கள் அணிவகுப்பு, குதிரை வீரர்கள் அணிவகுப்பு என நிகழ்ச்சி களைகட்டியிருந்தது விழாவில் பிரெஞ்சு விமானபடை வீரர்களும் சாகசங்களை நிகழ்த்தி கொண்டிருந்தனர்.பிரெஞ்சு நாட்டு ராணுவ விமானங்கள் வானத்தில் பிரெஞ்சு கொடியில் உள்ள மூவர்ணங்களை வானில் தோற்றுவித்து காட்டினர்.

French National Day Celebrated ..The flying soldier who encouraged the visitors

இதை பார்வையாளர்கள் மிகவும் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர். அப்போது தான் இத்தனை ஆண்டுகளில் எப்போதும் இடம் பெறாத மிக வித்தியாசமான சாகச நிகழ்ச்சி ஒன்று அரங்கேறி, பார்வையாளர்களை பரவசத்தின் உச்சிக்கே இட்டு சென்றது

பிரான்ஸ் நாட்டு ராணு வீரர் ஒருவர் ஸ்கேட்டிங் பலகை போன்ற சாதனத்தில் நின்று கொண்டு, அந்தரத்தில் சில நிமிடங்கள் விர் விர்ரென்று பறந்து வந்தார். இதை பார்த்த கூட்டத்தினர் ஒரு நிமிடம் தாங்கள் பார்ப்பது நிஜம் தானா என ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

ஒரு குட்டி ஜெட் அதிவேகத்தில் செல்வது போன்று குறிப்பிட்ட ராணுவ வீரர் அந்தரத்தில் சீறிப்பாய்கிறார். இதனை கண்டு அதிபர் மக்ரோன் உட்பட பலரும் ஆச்சர்யத்தில் உறைந்தனர். அந்த பறக்கும் ராணு வீரரின் கையில் துப்பாக்கியும் இருந்தது. துப்பாக்கியுடன் தான் அவர் வானில் சர் சர்ரென்று பறந்து சென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

பறக்கும் சிப்பாய் மற்றும் அந்த சாதனத்தை கண்டறிந்த பிரெஞ்சு விஞ்ஞானி பிராங்க் சபாடா தேசிய தின விழாவில் கூடியிருந்த அனைவரையுமே மெய்சிலிர்க்க வைத்து சில நிமிடங்கள் கட்டி போட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

சந்திராயன் 2 விண்கலம் திடீரென நிறுத்தம்.. நடந்தது என்ன?.. கடைசி நிமிடத்தின் பரபரப்பு தகவல்கள்சந்திராயன் 2 விண்கலம் திடீரென நிறுத்தம்.. நடந்தது என்ன?.. கடைசி நிமிடத்தின் பரபரப்பு தகவல்கள்

இந்த தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அந்தரத்தில் துப்பாக்கி ஏந்திய படி பறந்து வந்து சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள பிரெஞ்ச் அதிபர் மக்ரோன், நவீன மற்றும் புதுமையான எங்கள் ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வீடியோ இது என கூறியுள்ளார்.

இந்த பறக்கும் ஹோவெர் போர்டை கண்டறிந்துள்ள பிராங்க் சபாடாவிற்கு ஏரோநாட்டிகல் மைக்ரோ-ஜெட் இயந்திரத்தின் வளர்ச்சிக்காக கடந்த ஆண்டு பிரான்ஸ் ராணுவத்தால் 1.47 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது அதிகபட்சமாக மணிக்கு 190 கிமீ வேகம் வரை செல்ல கூடியது என்பது கூடுதல் தகவல்.

English summary
France's national day was celebrated yesterday in the country. At the spectacular event held at the Champs Elys பகுதியில்es on National Day, the crowd was stunned by the soldier who flew in the air.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X