For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்று பளார் அறை.. இன்று பறந்து வந்து விழுந்த முட்டை.. கதிகலங்கிய அதிபர்.. பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு

அதிபர் இமானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீசிய நபரை கைது செய்தனர்

Google Oneindia Tamil News

ரோம்: பிரான்சில் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

பிரான்ஸ் நாட்டில் லயான் என்ற நகரில் உணவு திருவிழா நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக அதிபர் இமானுவேல் மேக்ரோன் கலந்து கொள்ள சென்றார்.

மலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்? மலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்?

அப்போது திடீரென ஒரு முட்டை அவர் மீது வீசப்பட்டது.. ஆனால், அந்த முட்டை அவர் முகத்தின் மீது படவில்லை.. தோளில் பட்டு கீழே விழுந்துவிட்டது.. இதை பார்த்து அதிபர் ஒருகணம் அதிர்ச்சி அடைந்தார்.

முட்டைவீச்சு

முட்டைவீச்சு

அதற்குள் அவருடன் இருந்த அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக சுற்றிவளைத்து கொண்டனர்.. கீழே விழுந்த முட்டையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்... மேலும் முட்டை வீசிய நபரையும் பிடித்து போலீசார் இழுத்து சென்றனர்.. அப்போது அதிபர் குறுக்கிட்டு, "அந்த நபருக்கு என்கிட்ட சொல்ல ஏதாவது இருந்தால் சொல்லட்டும், அனுமதியுங்கள்" என்றார்.. ஆனாலும் அவரை விடாமல் கைது செய்து பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர். அந்த நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை.. முட்டையை ஏன் வீசினார் என்றும் தெரியவில்லை.

 என்ன காரணம்

என்ன காரணம்

இந்த முட்டை வீச்சு சம்பவம் வீடியோவாகவும் வெளிவந்து வைரலாகி கொண்டிருக்கிறது.. இப்படித்தான் கடந்த ஜுன் மாதமும் அதிபர் மேக்ரோன் கன்னத்தில் ஒருவர் பளார் என அறைந்தார்.. அவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.. 4 மாதங்கள் சிறை தண்டனையும் தரப்பட்டது.. இப்போது மீண்டும் இதே அதிபர் மீது தாக்குதல் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரதமர்

பிரதமர்

கடந்த 2016-ல் பொருளாதாரத் துறை அமைச்சராக இருந்த இமானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீசப்பட்டது... கடந்த 2017-ல் பிரதமர் பிரான்காய்ஸ் ஃபிலான் மீதும் மாவு வீசப்பட்டது.. தலைவர்கள் மீது இப்படி பொருட்களை வீசி எறிவது பரவலாக நடக்கும் விஷயம்தான் என்றாலும், மேக்ரோன் மீதான இந்த தொடர் தாக்குதல் எதற்காக என்ற கேள்வியையும் பலர் முன்வைத்து வருகிறார்கள்..

அறிவிப்பு

அறிவிப்பு

அந்த நாட்டில் அடுத்த 6 மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.. அப்போது மீண்டும் மேக்ரோன் போட்டியிட போகிறாரா என்று உறுதியாக தெரியவில்லை.. அது தொடர்பான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.. வன்முறையையும், சிறுமையான செயல்களையும் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன் என்று அதிபர் மேக்ரோன் ஏற்கனவே கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

English summary
French president Emmanuel Macron hit with egg during restaurant fair visit, viral video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X