For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரான்ஸ் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ‘மினிமிஸ்’ போட்டிக்கு தடை

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அழகிப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அழகிப் போட்டி நடத்துவது உலக நாடுகளில் சகஜமான விஷயம் தான். ஆனால், சிறு குழந்தைகளைப் பிரதானப்படுத்தி நடத்தப் படும் அழகிப் போட்டிகளால் சிறுகுழந்தைகளின் மனவளர்ச்சி பாதிப்படைவதாக தெரிவித்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அழகிப்போட்டிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ்.

பிரான்சின் சிறு நகரங்களில் இதுபோன்ற குழந்தைகளுக்கான அழகிப்போட்டிகள் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மினி மிஸ்...

மினி மிஸ்...

பிரான்ஸ் நாட்டில் இதுவரை 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மினி மிஸ் என்ற பெயரில் அழகிப் போட்டிகள் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் சிறுமிகள் விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து பெரியவர்களைப் போலவே ஒய்யார நடை நடந்து மேடைகளில் வலம் வருவார்கள்.

உடல் நலக் கேடு....

உடல் நலக் கேடு....

அத்தோடு, விதவிதமான மேக்கப் செய்து தங்கள் குழந்தைகளை அழகு படுத்தி இருப்பார்கள் அவர்களது பெற்றோர்கள். சிறு வயதிலேயே இத்தகைய மேக்கப் போடுவதால் குழந்தைகளுடைய தோல் பாழாவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

வயது முதிர்ச்சி....

வயது முதிர்ச்சி....

இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு விளம்பர வாய்ப்புகள் வந்து குவிகின்றதாம். இதன் மூலம் அவர்கள் மனதில் சிறு வயதிலேயே வயது முதிர்ச்சி ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

ஆபாச நிகழ்ச்சி...

ஆபாச நிகழ்ச்சி...

இநிலையில் அழகிப் போட்டியானது குழந்தைகளை ஆபாச முறையில் காட்டப்படும் நிகழ்ச்சி என்று செனேட்டர் மையமானது எதிர்ப்பு தெரிவித்தது.

2 வருட சிறை தண்டனை....

2 வருட சிறை தண்டனை....

தொடர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது குழந்தைகளுக்கான அழகிப் போட்டியானது பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி இத்தகைய போட்டிகள் நடத்துபவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும், 2 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது கொஞ்சம் அதிகம் தான்...

இது கொஞ்சம் அதிகம் தான்...

ஆனால் அனைத்து செனேட்டர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. மேலும் சோசலிச கட்சியானது இந்த தண்டனை மிக அதிகம் எனக் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Facing growing fears of “hypersexual” young girls, the French upper house of Parliament voted Wednesday to end beauty pageants for those younger than 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X