For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவுதி அரசின் புதிய அறிவுரைகள்

By Siva
Google Oneindia Tamil News

ரியாத்: ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் யாத்ரீகர்கள் நோய் வாய்ப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது குறித்து சவுதி சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா செய்ய உலக நாடுகளில் இருந்து மக்கா, மதீனாவுக்கு முஸ்லீம்கள் வருவார்கள். அதில் தொற்று நோய்கள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு புதிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சவுதி சுகாதாரத் துறை வெளியுறவு அமைச்சகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ஜியாத் அல் மெமிஷ் கூறுகையில்,

தொற்று நோய்கள் குறித்து உலகம் முழுவதும் நடப்பதை அரசு கண்காணித்து வருகிறது. உலகம் முழுவதும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் தெரிவித்துள்ள தேவைகளின்படியே சுற்றறிக்கை விட்டுள்ளோம். மஞ்சள் காய்ச்சல், சலி, போலியோ, புட் பாய்சனிங் உள்ளிட்ட நோய்கள் குறித்து அரசு எச்சரிக்கையாக உள்ளது. யாத்ரீகர்கள் பயணத்தை துவங்குவதற்கு 10 நாட்கள் முன்பாக அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

வயதானவர்கள், இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை மற்றும் மூச்சுவிட திணறும் நபர்களை தங்கள் பயணத்தை ஒத்தி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

யாத்ரீகர்களை அழைத்து வரும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அதில் கொசுக்கள் இல்லை என்பதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும் என்றார்.

English summary
Saudi government has announced new quarantine measures for pilgrims who come to the Kingdom for Haj and Umra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X