For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யா ஹெலிகாப்டரை 'அமெரிக்க ஏவுகணைகளால்' சுட்டு வீழ்த்தும் தீவிரவாதிகள்... பரபரப்பு வீடியோ

By Mathi
Google Oneindia Tamil News

டமாஸ்கஸ்: துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த விமானிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ரஷ்யா தயாரிப்பு ஹெலிகாப்டர்களில் ஒன்றை அமெரிக்காவின் டோவ் ஏவுகணைகள் மூலமாக தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சிக் குழுவான ப்ரீ சிரியா ஆர்மி மற்றும் அல்நூஸ்ரா, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது சிரியா ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது.

ரஷ்யா விமானிகள் கதி?

ரஷ்யா விமானிகள் கதி?

இந்நிலையில் துருக்கி வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானத்தை அந்நாட்டு ராணுவம் நேற்று சுட்டு வீழ்த்தியது. மேலும் அந்த விமானத்தை இயக்கிய பயணிகள் பாராசூட்டில் இருந்து குதித்த போது அவர்கள் மீதும் தரையில் இருந்து தாக்குதல் நடத்தியது துருக்கி. இதில் ஒரு விமானி உயிரிழந்ததாகவும் மற்றொருவரின் கதி என்ன என்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

விமானிகளை தேடிய ஹெலிகாப்டர்கள்

விமானிகளை தேடிய ஹெலிகாப்டர்கள்

இதனிடையே இந்த விமானிகளை தேடும் பணியில் 2 ரஷ்யா தயாரிப்பு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தன. இதில் ஒன்று இயந்திர கோளாறால் தரை இறக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்த ஹெலிகாப்டரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் இருப்பது என்ன?

வீடியோவில் இருப்பது என்ன?

அந்த வீடியோவில், 2 ஹெலிகாப்டர்கள் வனப்பகுதி ஒன்றில் பறக்கின்றன... பின்னர் ப்ரீ சிரியா ஆர்மி தீவிரவாதி ஒருவர் அமெரிக்கா ராணுவம் பயன்படுத்தி வரும் டோவ் ஏவுகணை மூலமாக ஹெலிகாப்டரை இலக்கு வைத்து தாக்குவதில் இதில் அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யா விளக்கம்

இந்த ஹெலிகாப்டரை இயக்கியது ரஷ்யா ராணுவத்தினரா? சிரியா ராணுவத்தினரா என்பது தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஷ்யா ராணுவ அதிகாரிகள், துருக்கி சுட்டு வீழ்த்திய விமானத்தில் இருந்த 2 விமானிகளைத் தேடும் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. இதில் ஒன்று தீவிரவாதிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒரு கடற்படை வீரர் கொல்லப்பட்டுள்ளார். எஞ்சியவர்கள் சிரியாவில் உள்ள ரஷ்யாவின் கடற்படை தளத்துக்கு திரும்பி வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

English summary
A video of Syrian rebels allegedly firing at a Russian-made helicopter on the ground has been posted on a YouTube channel associated with the FSA’s 1st Coastal Brigade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X