For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அர்ஜென்டினாவில் இன்று துவங்கியது ஜி20 உச்சி மாநாடு.. மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று துவங்குகிறது ஜி20 உச்சி மாநாடு.. பிரதமர் மோடி பங்கேற்பு

    பியோனஸ் அயர்ஸ்: ஜி-20 அமைப்பின் மாநாடு அர்ஜென்டினாவில் இன்று துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா சென்றடைந்தார்.

    இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட, 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதுதான், ஜி-20 அமைப்பு.

    G20 Summit 2018 begins in Argentina on today

    உலகின் பலம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்று ஜி-20 ஆகும். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா தலைநகர் பியோனஸ் அயர்ஸ் நகரில் ஜி-20 மாநாடு, இன்று துவங்குகிறது.

    இன்றும் நாளையும் 2 நாட்கள் மாநாடு நடைபெறும். இவ்வமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடுகளின் அதிபர்கள் அல்லது பிரதமர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்கிறார். இதற்காக நேற்று முன்தினம் அர்ஜென்டினாவுக்கு மோடி புறப்பட்டார்.நேற்று அவர், பியோனஸ் அயர்ஸ் நகரம் சென்றடைந்தார்.

    உலகம் இன்று எதிர்கொள்ளும், பல்வேறு அச்சுறுத்தல்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் இடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.

    English summary
    The 2018 G20 Summit began on November 30, 2018 in the city of Buenos Aires, Argentina.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X