For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு கால்பந்தை பரிசாக அளித்த நார்வே பிரதமர் நார்வே எர்னா சால்பர்க் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெர்லின்: ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் மோடிக்கு நார்வே பிரதமர் எர்னா சால்பர்க் கால்பந்து ஒன்றை பரிசாக வழங்கினார்.

ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் ஜி 20 மாநாடு நேற்று தொடங்கியது. இந்த நிலையில் 2-வது நாளான இன்று பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

G20 Summit: PM Modi meets world leaders at the summit

இங்கிலாந்து பிரதமர் தெரசா மேபிரதமர் மோடிக்கு, நார்வே பிரதமர் எர்னா சால்பர்க் கால்பந்து ஒன்றைப் பரிசாக வழங்கினார். , ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இத்தாலி பிரதமர் ஜென்டிலோனி, நார்வே பிரதமர் எர்னா சால்பர்க், தென்கொரிய பிரதமர் மூன் ஜே-இன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.

இந்த சந்திப்பின் போது இந்தியாவுடனான நட்புறவு, எதிர்கால திட்டங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் ஆகியவை குறித்து மோடி ஆலோசனை நடத்தினார்.இத்தாலி மற்றும் நார்வேயுடன் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதனிடையே நார்வே பிரதமர் எர்னா சால்பர்க் பிரதமர் மோடிக்கு கால்பந்து ஒன்றைப் பரிசாக வழங்கினார். அர்ஜென்டினா அதிபர் மவ்ரிசியோ மெக்ரியையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜி20 மாநாட்டின் இறுதி நிகழ்ச்சிக்குப் பின் தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.

English summary
Norwegian Prime Minister Erna Solberg on Saturday presented his Indian counterpart PM Narendra Modi with a football.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X