For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏசு கிறிஸ்துவின் குணாதிசயம் குறித்து காந்தி எழுதிய கடிதம் விற்பனை

ஏசு கிறிஸ்துவின் குணாதிசயத்தை விவரித்து காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஏசு கிறிஸ்துவின் இயல்பை விவரிக்கும் விதமாக காந்தியடிகள் எழுதிய அசல் கடிதம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் கடந்த 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி அந்த கடிதத்தை காந்தி எழுதியுள்ளார். பைன்ட் இங்கில் அச்சடிக்கப்பட்டு எம்கே காந்தி என்று தெளிவாக கையெழுத்து போட்டுள்ளார் காந்தி.

விற்பனை

விற்பனை

இந்த கடிதம் பல ஆண்டுகளாக தனிப்பட்ட ஒரு சேகரிப்பாக இருந்தது. தற்போது பென்சில்வேனியாவை சேர்ந்த ராப் கலெக்ஷன்கள் என்ற நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில்...

அந்த கடிதத்தில் மனித குலம் குறித்து போதிப்பவர்களில் ஏசு கிறிஸ்து சிறந்த போதகர் என்று காந்தி குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தை அவர் அமெரிக்காவில் உள்ள மூத்த கிறிஸ்துவ மதத் தலைவர் ஒருவருக்கு எழுதியிருந்தார்.

சிறந்த கடிதம்

இது குறித்து ராப் கலெக்ஷன்களின் தலைவர் நாத்தன் ராப் கூறுகையில் காந்தியின் பார்வையில் உலகத்தின் மதங்கள் அனைத்தும் சமாதானத்திற்காகவே உருவானதாகவும், மனிதகுலத்தின் போதனையாக இயேசு குறித்த அவரது நம்பிக்கை, சக மனிதருடன் ஒத்துழைப்பதற்கான அவரது முயற்சிகளை காட்டுகிறது. மேலும் காந்தி எழுதியிருந்த மதத்தை பற்றிய சிறந்த கடிதங்களில் இதுவும் ஒன்றாகும்.

50 ஆயிரம் டாலர்கள்

50 ஆயிரம் டாலர்கள்

இயேசுவை பற்றி காந்தி குறிப்பிட்ட வேறு எந்தக் கடிதமும் பொதுச் சந்தைக்கு வந்ததாக எங்கள் ஆய்வில் தெரியவில்லை. இதன் விற்பனை 50 ஆயிரம் அமெரிக்க டாலரில் (இந்திய மதிப்பில் ரூ.33 லட்சத்து 60 ஆயிரத்துக்கு 750) தொடங்கி தற்போது வரை தொடர்கிறது.

English summary
A letter written by Mahatma Gandhi, in which he discusses the nature of existence of Jesus Christ, is for sale in America by Raab collection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X