For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அழகு, நான் முதலாவதாக இருந்திருக்க வேண்டும்:பிலிப்பைன்ஸ் அதிபர் வேட்பாளர்

By Siva
Google Oneindia Tamil News

மணிலா: 1989ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் சிறைக்கைதிகளால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மிகவும் அழகாக இருந்துள்ளார், அவரை முதலில் நான் பலாத்காரம் செய்திருக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ரோட்ரிகோ டிகாங் டுடெர்ட் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் டாவோ நகர மேயரான ரோட்ரிகோ டிகாங் டுடெர்ட் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி க்வீசான் நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

Gang-rape victim was so beautiful, wish I were the first: Philippines presidential candidate

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அவர் பேசியதாவது,

1989ம் ஆண்டு சிறைக் கைதிகளால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ சேவகி ஜாக்குலின் ஹாமில் பலாத்காரம் செய்யப்பட்டதை நினைத்து கோபம் வந்தது. ஆனால் அவர் அழகாக இருந்தார். அவரை மேயர்(தன்னை தான் கூறுகிறார்) அல்லவா முதலில் பலாத்காரம் செய்திருக்க வேண்டும். வீணாகிவிட்டதே என்று தெரிவித்துள்ளார்.

ரோட்ரிகோ டாவோ நகர மேயராக முதன்முதலாக பதவியேற்றபோது 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாவோ நகரில் உள்ள சிறையில் இருந்த கைதிகள் சிலர் காவலர்களின் துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக்குலின் ஹாமில் உள்பட 15 பேரை பிணையக்கைதிகளாக பிடித்தனர்.

கைதிகள் ஜாக்குலினை பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் வந்து ஆயுதம் வைத்திருந்த கைதிகளை சுட்டுக் கொன்றனர். அப்போது ஜாக்குலினின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோட்ரிகோவின் பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

English summary
Philippines presidential candidate Rodrigo Digong Duterte said that 1989 gang rape victim was so beautiful and how he wished he was the first.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X