For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கஞ்சா பயிரிட கனடாவில் அனுமதி: கஞ்சா தோட்டங்களாக மாறும் பூந்தோட்டங்கள்!

Google Oneindia Tamil News

வின்னிபெக் : கனடாவில் அடுத்த ஆண்டு முதல் கஞ்சா பயிரிட அந்நாட்டு அரசு அனுமதிக்க உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கனடாவின் ஒரு சில மாநிலங்களில் கஞ்சா பயிரிடப்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு முதல் இதனை நாடு முழுவதும் நடைமுறைபடுத்த கனடா நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

கனடாவில் கஞ்சா போதைப் பொருள் மருத்துவ தேவைக்காக அரசு அனுமதியுடன் மிகக் குறைந்தளவு விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் வரும் 2017ஆம் ஆண்டு முதல் அனைத்து விவசாயிகளும் பொழுதுபோக்குக்காக கஞ்சா பயிரிடுவதை அந்நாட்டு அரசு அனுமதிக்க உள்ளது.

 கஞ்சா தோட்டங்களாக மாறும் பூந்தோட்டங்கள்

கஞ்சா தோட்டங்களாக மாறும் பூந்தோட்டங்கள்

கனடாவில் பெரும்பாலும் லாவண்டர் உள்ளிட்ட மலர்களை வாசனை திரவியங்களுக்காக விவசாயிகள் இதுவரை பயிரிட்டு வந்தனர். தற்போது அரசே அனுமதிக்க உள்ளதால் கஞ்சா பயிரிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 வருமானத்தை அதிகரிக்க முடிவு

வருமானத்தை அதிகரிக்க முடிவு

கஞ்சா உற்பத்தியை சட்டப்பூர்மாக்குவதன் மூலம் 2018ஆம் ஆண்டுக்குள் 13ஆயிரம் கிலோ கஞ்சா உற்பத்தி செய்ய கனடா அரசு தீர்மானித்துள்ளது. கஞ்சா விற்பனை மூலம் 2019ஆம் ஆண்டிலிருந்து 125 மில்லியன் கனடா டாலர்கள் வருமானம் ஈட்டவும் கனடா அரசு மடிவு செய்துள்ளது.

 உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்

உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்

2018ஆம் ஆண்டுக்குப் பிறகு 6லட்சத்து 65000 கிலோ கஞ்சா உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு நாடாளுமன்ற அதிகாரி தெரிவித்துள்ளார். கஞ்சா உற்பத்தியில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

 பாதுகாப்புடன் பணிபுரியும் தொழிலாளர்கள்

பாதுகாப்புடன் பணிபுரியும் தொழிலாளர்கள்

தற்போது மருத்துவ தேவைக்காக பயிரிடப்பட்டுள்ள பண்ணைகளில் பணிபுரியும் மைக்ரோ பயாலஜிஸ்டுகள் முகமூடி, ஷு, கையுறைகள் உள்ளிட்டவற்றை அணிந்தே பாதுகாப்புடன் பணிபுரிந்து வருகின்றனர்.

 இளைஞர்களின் மேம்பாட்டுக்காக

இளைஞர்களின் மேம்பாட்டுக்காக

கஞ்சா விற்பனை மூலம் அதிகளவு வருமானம் ஈட்டவுள்ள கனடா அரசு அந்தப் பணத்தை அந்நாட்டு இளைஞர்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

English summary
The Canada Government is going to legalize the Ganja cultivation in lands from next year. Government wants to increase the income by producing ganja as recreational activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X