For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடனே வெளியே வாங்க டிரம்ப்.. "பங்கரில்" பதுங்கிய அதிபர்.. அமெரிக்க போராட்டத்தை கையில் எடுத்த சீனா!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: அமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து சீனா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது.

Recommended Video

    அமெரிக்க போராட்டத்தை கையில் எடுத்த சீனா

    அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் போலீசாரால் கொலை செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணையில் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தை போலீஸ் நெருக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த 27ம் தேதி நடு ரோட்டில் அமெரிக்காவில் மின்னெபோலீஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

    இதனால் அமெரிக்காவில் உள்நாட்டு போராட்டங்கள் வெடித்துள்ளது. அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு எதிராக தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகிறது.

    தாங்க முடியவில்லை.. ஜார்ஜ் தாங்க முடியவில்லை.. ஜார்ஜ் "கொலையால்" பொங்கி எழுந்த ஒபாமா.. டிரம்ப் எதிர்பார்க்காத திருப்பம்!

    சீனா கருத்து

    சீனா கருத்து

    இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து சீனா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவை சேர்ந்த அதிகாரிகள் வரிசையாக டிவிட் செய்து வருகிறார்கள். அதில் சீன அரசுக்கு நெருக்கமான பத்திரிக்கையான தி குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் ஹு அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் சமத்துவமற்ற நிலைமை இருக்கிறது.

    வெளியே வாங்க டிரம்ப்

    வெளியே வாங்க டிரம்ப்

    அதிபர் டிரம்ப் அங்கு போராட்டங்களை பார்த்து பயந்து ஒளிந்து கொண்டார். அவர் இப்படி ஒளிந்து கொள்வது தவறு. உடனே டிரம்ப் பங்கரில் இருந்து வெளியே வர வேண்டும். அவர் நேரடியாக சென்று போராட்டக்காரர்களிடம் பேச வேண்டும். அவர்களிடம் உரையாட வேண்டும்.பாதுகாவலர்களுக்கு பின்னால் அவர் ஒளிந்து கொள்ள கூடாது.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    ஹான்காங்கில் போராட்டம் நடந்த போது அமெரிக்கா அதை விமர்சனம் செய்தது. எங்கள் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டது. இப்போது ஹாங்காங் போராட்டம் போலவே உங்கள் நாட்டில் ஒரு போராட்டம் நடக்கிறது. போய் பேசுங்கள். இப்படி ஒளிந்து கொள்ளாமல் பேசுங்கள். சீனாவிற்கு கொடுத்த அறிவுரையை நீங்கள் உங்கள் நாட்டில் பின்பற்றுங்கள் என்று ஹு கூறியுள்ளார்.

    ஹாங்காங் போராட்டம்

    ஹாங்காங் போராட்டம்

    சீனாவில் கடந்த ஒரு வருடமாக ஹாங்காங் போராட்டம் நடந்து வருகிறது. முன்பு நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிராகவும் , தற்போது புதிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகவும் அங்கு போராட்டம் நடந்து வருகிறது. இதை அமெரிக்கா தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஹாங்காங் நாட்டின் உரிமையை சீனா பறித்துவிட்டது என்று அமெரிக்கா தொடர்ந்து புகார்களை அடுக்கி வருகிறது.

    செம பதிலடி

    செம பதிலடி

    இந்த நிலையில் ஹாங்காங் போராட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்கன் கருத்து தெரிவித்து இருந்தார். ஹாங்காங் நாட்டில் சீனா வன்முறையை தூண்டுகிறது. அங்கிருக்கும் மக்களை ஒடுக்குகிறது என்று கூறி இருந்தார். இதை ஷேர் செய்த சீனாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹுவா சுங்யிங், ''என்னால் மூச்சு விட முடியவில்லை'' என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

    தொடர் சண்டை

    தொடர் சண்டை

    அமெரிக்காவில் ஜார்ஜ் கொலை செய்யப்பட்ட போது, இதேபோல் என்னால் மூச்சு விட முடியவில்லை என்று கூறினார். அவர் தனது மரணத்திற்கு முன் கூறிய கடைசி வார்த்தைகள் இதுதான். தற்போது அதை வைத்து சீனா அமெரிக்காவை நெருக்கி வருகிறது. சீனா அமெரிக்கா இடையே ஏற்கனவே கொரோனா காரணமாக பிரச்சனை உள்ள நிலையில் தற்போது இந்த புதிய விமர்சனங்கள் காரணமாக சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    English summary
    George Floyd death: China mocks Trump for hiding behind bunkers in White house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X