For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜார்ஜியா அதிபரின் மாதச் சம்பளம் இனி 9000 'லாரி'யாம்...!

Google Oneindia Tamil News

திபிலிசி: ஜார்ஜியா நாட்டு அதிபரின் மாதச் சம்பளத்தை ஏற்றி விட்டனர். இனிமேல் அவருக்கு மாதா மாதம் 9000 லாரி சம்பளம் தரப் போகிறார்கள். அதாவது நம்ம ஊர் கணக்குப்படி ரூ. 3 லட்சம்.

ஜார்ஜியாவில் நாணயத்திற்கு லாரி என்று பெயர். பெயருக்கேற்ப அதிபருக்கு வண்டி வண்டியாக சம்பளத்தைக் கொட்டிக் கொடுக்கிறது அந்த ஊர் அரசு.

Giorgi Margvelashvili

நாடு பொருளாதாரச் சிக்கலில் இருந்தாலும் கூட, அதிபருக்கான சம்பளத்தை ஏற்றியபடியே உள்ளனர். இதனால் மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். ஆனாலும் விடுவதாக இல்லை. இப்போது அதிபரின் சம்பளத்தை கணிசமாக ஏற்றியுள்ளனர்.

இனிமேல் அதிபர் ஜியார்ஜி மார்கெவ்லேஷ்விலி மாதா மாதம் 9000 லாரி சம்பளம் பெறுவார். இது டாலர் மதிப்பில் 4500 டாலராகும். நம்ம ஊர் ரூபாய் மதிப்பில் ரூ. 3 லட்சத்து 8 ஆயிரத்து 90 ஆகும்.

இதுவரை வாங்கி வந்த சம்பளத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

இந்த உயர்வுக்கு நிதியமைச்சர் நோடார் கதுரி விளக்கம் அளிக்கையில், கடந்த முறை அதிபராக இருந்த மிக்கியீல் சாக்ஷ்விலிக்கு நிறைய வருமான வாய்ப்புகள் இருந்தன. எனவே அவருக்கு சம்பளம் குறைவாக இருந்தது. ஆனால், தற்போதைய அதிபருக்கு இந்த சம்பளத்தை விட்டால் வேறு வழியில்லை. எனவேதான் அவருக்கு சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்துள்ளோம் என்றார்.

ஜார்ஜியா நாட்டின் உத்தமத் தலைவர் போல இந்த அதிபர் ஐயா....!

English summary
Georgia has doubled the gross monthly salary of its President Giorgi Margvelashvili to 9,000 lari (an equivalent of about $5,000) from 4,500 lari. Finance Minister Nodar Khaduri told journalists on Thursday that, unlike previous President Mikheil Saakashvili, Margvelashvili's salary will be his only source of income.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X