For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ் விமான விபத்து– 2வது கருப்புப் பெட்டியை தேடி தீவிர வேட்டை

Google Oneindia Tamil News

லி போர்கெட்: ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த பயனுள்ள தகவல்கள் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டதாக பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மறுபக்கம் இரண்டாவது பெட்டியை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற அந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

Germanwings Pilot Was Locked Out of Cockpit before Crash in France

விமானம் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன்பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்ததாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிர தேடுதல் பணியால் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக அதை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.

இதுகுறித்து, ஆய்வினை மேற்கொண்டு வரும் பிரெஞ்சு விமான விபத்து விசாரணையமைப்பின் தலைவரான ரெமி ஜவுடி கூறுகையில், "தற்போது, விமானத்திலிருந்த காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரிலிருந்து பயனுள்ள தகவல்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Germanwings Pilot Was Locked Out of Cockpit before Crash in France

"காக் பிட்" எனப்படும் விமானியின் அறையில் கேட்கும் சத்தங்களை, கருப்பு பெட்டி பதிவு செய்து வைத்திருக்குமென்று விளக்கமளித்த ரெமி, "விபத்துக்கான காரணம் குறித்தோ அல்லது அது ஏன் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொள்ளவில்லை என்பது குறித்தோ ஒரு சிறிய விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை" என்று திட்டவட்டமாக விபத்துக்கான காரணம் குறித்து கூற மறுத்தார்.

செய்தியாளர் சந்திப்பிற்கு சில நிமிடங்கள் முன்னர்தான் தன்னிடம் அந்த தரவுகள் தரப்படுமென்றும், விசாரணை ஆய்வாளர்கள் கருப்பு பெட்டி பதிவுகளை இன்னும் ஆய்வு செய்து முடிக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

Germanwings Pilot Was Locked Out of Cockpit before Crash in France

விமானத்தின் தொழில்நுட்ப தரவுகள் அனைத்தும் இரண்டாவது கருப்பு பெட்டியிலேயே பதிவாகியிருக்கும் என்பதால், அதைக் கண்டுபிடிக்கும் பணி, விபத்து நடந்த ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
As officials struggled Wednesday to explain why a jet with 150 people on board crashed amid a relatively clear sky, an investigator said evidence from a cockpit voice recorder indicated one pilot left the cockpit before the plane's descent and was unable to get back in.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X