For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஜெர்மன் தடை- பயங்கரவாத அமைப்பாக பிரகடனம்

Google Oneindia Tamil News

பெர்லின்: ஹிஸ்புல்லா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்துள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.

ஈரான் ஆதரவுடன் லெபனானில் இருந்து ஹசான் நசரல்லா தலைமையில் செயல்பட்டு வருகிறது ஹிஸ்புல்லா இயக்கம். லெபனானில் அரசியல் கட்சியாகவும் இது இயங்குகிறது.

Germany bans Hezbollah as terrorist organisation

உலகின் முக்கியமான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றாக ஹிஸ்புல்லா கருதப்படுகிறது. இந்த நிலையில் ஜெர்மனியில் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

ஜெர்மனியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஜெர்மனியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவும் ஹிஸ்புல்லா பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தின் லட்சினைகள் எதுவும் பொதுவெளிகளில், ஊடகங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.

Recommended Video

    உலகத்தை உலுக்கிய கொள்ளை நோய்கள்... இனியாவது மாறுவோமா?

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இதுபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெர்மன் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றார்.

    English summary
    Germany has banned Hezbollah and designating the Iran-backed group a terrorist organisation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X