For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மன் நீச்சல் குளங்களில் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆண்கள்.. கார்ட்டூன் மூலம் அட்வைஸ்!

By Siva
Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பொது நீச்சல் குளங்களில் பெண்களை கண்ட இடங்களில் தொடும் புலம் பெயர்ந்த ஆண்களுக்காக கார்டூன் வடிவில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் நடக்கும் நாடுகளில் இருந்து வெளியேறும் மக்கள் பலர் ஐரோப்பாவில் குடியேறி வருகிறார்கள். பலர் சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள். ஜெர்மனியில் அப்படி பலர் குடியேறியுள்ளனர்.

Germany hands out cartoon etiquette guides at swimming baths after dozens of women were groped by migrants

அப்படி ஜெர்மனிக்கு வந்தவர்களில் பலர் பெண்களை பொது இடங்களில் கண்ட இடத்தில் தொட்டு அட்டூழியம் செய்கிறார்கள். பொது நீச்சல் குளங்களில் பெண்களால் நிம்மதியாக நீந்த முடியவில்லை.

அவர்களை கண்ட இடத்தில் தொட்டு சில்மிஷம் செய்வது, நீரில் பிடித்து தள்ளுவது என்று புலம் பெயர்ந்த ஆண்கள் அட்டகாசம் செய்கிறார்கள். இந்நிலையில் ஜெர்மனி அதிகாரிகள் சில்மிஷக்காரர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஜெர்மனி, ஆங்கிலம், அரபு உள்பட 7 மொழிகளில் கார்டூன் படமிட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்கள்.

இது குறித்து ஜெர்மனி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ஜெர்மனியில் குடியேறியவர்கள் நீச்சல் அடிக்க தெரியாமல் பொது நீச்சல் குளங்களுக்கு வந்து பெண்களை கண்ட இடத்தில் தொட்டு சில்மிஷம் செய்கிறார்கள். அவர்களுக்கு ஜெர்மனி மொழியில் எச்சரிக்கை விடுத்தால் அவர்களுக்கு ஒன்றும் புரிவது இல்லை.

பெண்கள் எந்த உடை அணிந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு புரிவது இல்லை என்றார்.

English summary
German authorities hand out cartoon etiquette guides to migrants after dozens of women were groped by them in swimming pools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X