For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவங்களை விட.. "இவங்க" கூடத்தான் பாதி நேரம் இருக்கோம்.. இப்ப இது வேறயா.. ஜெர்மானியர்கள் சலிப்பு!

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் நாய்களை வாக்கிங் கொண்டு செல்ல புதிய விதிகள் விதிக்கப்பட்டதால் அதன் உரிமையாளர்கள் மண்டையை பிய்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    அதே ஒற்றுமை.. ஹிட்லர் வழியை பின்பற்றும் ஜி ஜிங்பிங்

    கொரோனா வைரஸ், வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் மூலம் பரவும் என்ற பொய்யான தகவலால் ஆரம்பத்தில் பலர் தங்கள் செல்லங்களை கனத்த இதயத்துடன் கண் காணாத இடங்களுக்கு கொண்டு போய் விட்டுவிட்டனர்.

    இதையடுத்து மருத்துவர்களும் கால்நடை துறையும் செல்ல பிராணிகளால் எந்த நோயும் மனிதர்களுக்கு பரவுவதில்லை என அறிவித்தவுடன் பெரும்பாலானோர் நாம் செய்தது எத்தனை முட்டாள்தனம் என்பதை உணர்ந்தனர்.

    வாக்கிங்

    வாக்கிங்

    இந்த நிலையில் ஜெர்மனியில் நாய்களை வாக்கிங் கூட்டிச் செல்ல புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு வேளாண்துறை அமைச்சர் ஜூலியா குளோக்னெர் கூறுகையில் செல்ல பிராணியான நாய்கள் பராமரிப்பு குறித்து நான் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.

    தோட்டம்

    தோட்டம்

    அதன்படி நாய்களை தினந்தோறும் வாக்கிங் அழைத்து செல்ல வேண்டும் என்ற புதிய விதிகளை வகுக்கிறேன். நம் வீட்டு தோட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரு வேளை மொத்தமாக ஒரு மணி நேரம் நாய்களை ஓடவோ நடக்கவோ விட வேண்டும். செல்லப்பிராணிகள் வெறும் விளையாட்டு பொம்மைகள் அல்ல.

    கவனம்

    கவனம்

    அதன் தேவைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு போதுமான உடற்பயிற்சிகள் தேவை. அவை தனியாக அப்படியே விட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ளார். இது ஜெர்மன் நாட்டு வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    நாய்களின் உரிமையாளர்கள்

    நாய்களின் உரிமையாளர்கள்

    நாய்களின் உரிமையாளர்களுக்கும் வாக்கிங்கா? என்னாது இது என அவர்கள் தங்கள் கோபத்தை கொப்பளிக்கிறார்கள். ஏற்கெனவே அவர்கள் வளர்க்கும் நாய்களுடன் போதிய நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படியிருக்கையில் இதுபோன்ற கட்டாய விதிகள் எதற்கு? என்கிறார்கள். மேலும் இதுகுறித்து நாய்களுக்கு பயிற்சி வழங்குவோர் கூறுகையில் நாய்களுக்கான உடற்பயிற்சி என்பது அதன் உடல்நலம், வயது, நாய்களின் இனத்தை பொருத்தது.

    பக் ரக நாய்

    பக் ரக நாய்

    ஒரு சின்ன லேப்ரடார் நாய்க்கு பக் ரக நாய்களை விட இரண்டு மணி நேரம் வாக்கிங் தேவைப்படும் என்கிறார். நாட்டில் 9.4 மில்லியன் செல்லப் பிராணிகள் உள்ளன. அவற்றின் நலனுக்காக என்ன செய்யலாம் என்பதை அரசு முடிவு செய்துவிட்டதா என்ற விவாதமே நடைபெறுகிறது. இந்த விதியை அமல்படுத்த 16 மாகாண அரசுகளே பொறுப்பு என்பதால் அதுகுறித்த தெளிவான தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

    English summary
    Germany Government imposes new rules for taking dogs for walking. Owners scratches their heads.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X