For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2016ல் மக்கள் வாழச் சிறந்த நாடுகள்... ஜெர்மனி முதலிடம்... இந்தியாவிற்கு 22!

Google Oneindia Tamil News

லண்டன்: உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 22வது இடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தாண்டு உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் உலகின் முக்கிய 60 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆய்வு...

ஆய்வு...

இந்தப் பட்டியல் வர்த்தக தலைவர்கள், பிற உயர் அதிகாரிகள் என மொத்தம் 16,200 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவு ஆகும். இவர்களில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகளாக உள்ளவர்கள், பிறர் சாதாரண மக்கள் ஆவர்.

முக்கியமானவை...

முக்கியமானவை...

இதில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பாரம்பரியம், கலாசாரம், தொழில்முனைதல், உள்கட்டமைப்பு, வாழ்கை தரம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளப்பட்டன.

ஜெர்மனி முதலிடம்...

ஜெர்மனி முதலிடம்...

இந்தப் பட்டியலின் படி, முதலிடத்தை ஜெர்மனி பிடித்துள்ளது. 2வது மற்றும் 3வது இடங்களை முறையே கனடாவும், இங்கிலாந்தும் பிடித்துள்ளன.

அமெரிக்காவுக்கு 4வது இடம்...

அமெரிக்காவுக்கு 4வது இடம்...

அமெரிக்காவுக்கு இந்தப் பட்டியலில் 4வது இடம் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் முறையே ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

சீனாவும், இந்தியாவும்...

சீனாவும், இந்தியாவும்...

இந்தப் பட்டியலில் மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவுக்கு 17வது இடமும், இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவிற்கு 22வது இடமும் கிடைத்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி...

பொருளாதார வளர்ச்சி...

இந்த ஆய்வின் படி, பொருளாதார வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கல்வி தரத்தில் உயர்ந்துள்ள இந்தியா, தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் முக்கிய மையமாக உள்ளது.

ஏழ்மையான நாடு...

ஏழ்மையான நாடு...

ஆனால் மக்கட்தொகை காரணமாக, வருமானம் மற்றும் மொத்த தேசிய உற்பத்தியில் பின் தங்கியுள்ள இந்தியா, உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராட்டு...

பாராட்டு...

அதோடு, பிரதமர் மோடி மற்றும் அவருடைய நடவடிக்கைக்கு இந்த ஆய்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை தொடர்ந்து அடுத்த இடங்களை போர்ச்சுக்கல், ரஷியா மற்றும் இஸ்ரேல் 23, 24 மற்றும் 25-வது இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
What is the best country to live in the world? According to the Best Countries reports released at the World Economic Forum in Davos, Switzerland, it is Germany.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X