For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க இருக்கோம்.. நம்பிக்கையூட்டும் ஜெர்மனி.. இத்தாலி கொரோனா நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை

Google Oneindia Tamil News

பெர்லின்: தங்கள் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஜெர்மனி, தற்போது சக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.

கடுமையான நோய்வாய்ப்பட்ட ஆறு இத்தாலிய கொரோனா வைரஸ் நோயாளிகள் வடக்கு இத்தாலியின் பெர்கமோவிலிருந்து ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஜெர்மன் விமானப்படை தெரிவித்துள்ளது.

நோயாளிகள் சிகிச்சைக்காக, ஜெர்மனியின், மேற்கு மாநிலமான ரைன்லேண்ட்-பாலாட்டினேட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அந்தக் அந்தக் "கொரோனா"வைப் பார்த்து இந்த "கொரோனா"வே பயந்துருச்சே.. உற்பத்தியை நிப்பாட்டு.. அதிரடி முடிவு!

வடக்கு பகுதி

வடக்கு பகுதி

இத்தாலியின் வடக்கு பிராந்தியத்தில்தான், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் இடம் இல்லை. எனவே, ஜெர்மனி, வடக்கு இத்தாலியில் இருந்து நோயாளிகளை அழைத்துச் செல்லத் தொடங்கியுள்ளது.

ஜெர்மனி புள்ளி விவரம்

ஜெர்மனி புள்ளி விவரம்

1,295 இறப்புகளுடன், ஜெர்மனியின் கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக இருந்தது. இத்தாலியில் இது, 12 சதவிகிதம், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் 10 சதவிகிதம், சீனாவில் 4 சதவிகிதம் மற்றும் அமெரிக்காவில் 2.5 சதவிகிதம். கொரோனா வளைவைத் தட்டையாக மாற்றியதில் பெரும் சாதனைக்கு சொந்தக்கார நாடு தென் கொரியா. அங்கு கூட 1.7 சதவிகிதம் இறப்பு விகிதம் இருந்தது. ஆனால் ஜெர்மனி இந்த பிரச்சினையை நன்கு கையாண்டுள்ளது.

அதிகம் பேருக்கு டெஸ்டிங்

அதிகம் பேருக்கு டெஸ்டிங்

ஜெர்மனி பெரும்பாலான நாடுகளை விட அதிகமான மக்களை பரிசோதனை செய்து வருகிறது. அதாவது குறைவான அறிகுறிகளுடன் அல்லது அறிகுறியே இல்லாவிட்டாலும், அதிக நபர்களை சோதித்து பார்க்கிறது ஜெர்மனி. இது ஒரு முக்கியமான காரணமாகும். மருத்துவ ஊழியர்கள், குறிப்பாக வைரஸ் தொற்று மற்றும் பரவும் அபாயத்தில் உள்ளவர்கள், தொடர்ந்து சோதிக்கப்படுகிறார்கள்.

அசத்தல்

அசத்தல்

இளம் வயது நோயாளிகள், தொடர்பு டிரேசிங், தீவிர சிகிச்சை வசதிகள் அதிகம் இருப்பது, நம்பகமான அரசு, சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை பரவலாகப் பின்பற்றியது போன்றவையும் ஜெர்மனியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

English summary
Six severely ill Italian COVID-19 patients were flown to Germany from Bergamo in northern Italy, the German Air Force said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X