For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரலசைவில் “வித்தை” – மின்சாதனங்களை இயக்க வந்திருச்சு “மோதிரம்”

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டனில் விரல் நுனியில் மின்சாதனங்களை இயக்கும் மோதிரம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பார்வையிழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மோதிரம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த மோதிரத்தை விரலில் மாட்டிக் கொண்டு நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ அதை விரலால் சுழற்றி காற்றில் எழுதினால் போதும். எல்லா மின்சாதனங்களும் தன்னுடைய பணியை செவ்வனே செய்யும்.

Gesture control your appliances with wearable ring

இதேபோல், உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்ய வேண்டுமா கைபேசியை எதிரே வைத்துக் கொண்டு யாருக்கு, எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என விரல் நுனியை அசைத்து கட்டளையிட்டால் நொடிப்பொழுதில் அது நிறைவேறி விடும்.

இத்தனை சிறப்பம்சங்களுடன் கூடிய நவீன மோதிரத்தை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த மோதிரம் "வைப்ரேட்டிங் சென்சார்" என்ற அதிர்வலைகளை உள்வாங்கி கொண்டு விரலசைவின் கட்டளைகளுக்கு ஏற்ப கட்டுப்பட்டு செயல்படுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
A new hi-tech ring reportedly allows wearer to control devices and give input by gesture of fingers. Kick starter project, Ring, is a hardware device that resembles an ordinary ring, but is filled with sensors and electronics to use gesture control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X