For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐரோப்பிய அணு ஆய்வு ஆய்வகத்தின் முதல் பெண் தலைவராக ஜியனோட்டி நியமனம்

Google Oneindia Tamil News

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மிகப் பெரிய ஹாட்ரான் கொலைடர் ஆய்வகத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை துகள் இயற்பியலாளர் பாபியோலா ஜியனோட்டி பெற்றுள்ளார்.

சிஇஆர்என் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆய்வு அமைப்பு சுவிட்சர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதில் பெருவெடிப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு நாடுகள் சேர்ந்து இங்கு பிரமாண்டமான ஹாட்ரான் கொலைடரை நிர்மானித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. "கடவுள் துகள்" எனப்படும் கண்ணுக்குப் புலப்படாத துகள் குறித்த ஆய்வு இங்கு நடந்து வருகிறது.

பாபியோலா...

பாபியோலா...

இந்த மையத்தின் தலைவராக் தற்போது பாபியோலா ஜியனோட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மையத்தின் இயக்குநர் ஜெனரலாக இதுவரை ரோல்ப் ஹியூர் இருந்து வந்தார். கடந்த 7 வருடமாக இப்பொறுப்பை ஹியூர் வகித்து வந்தார்.

அட்லஸ் கொலைபரேஷன்...

அட்லஸ் கொலைபரேஷன்...

இந்தப் பொறுப்புக்கு தற்போது பாபியோலா வந்துள்ளார். இவர் இதற்கு முன்பு சிஇஆர் என் அமைப்பின் அட்லஸ் கொலைபரேஷன் பிரிவின் தலைவராக இருந்து வந்தார்.

கடவுள் துகள் குறித்த ஆய்வு...

கடவுள் துகள் குறித்த ஆய்வு...

இந்த பிரிவு ஹிக்ஸ் போசான் எனப்படும் கடவுள் துகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வந்த இரு குழுக்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடவுள் துகள் உள்ளதாக முதலில் இந்தக் குழுதான் அறிவித்தது. அப்போது முதலே ஜியனோட்டி பெரும் பிரபலமடைந்தார்.

திறமைசாலி...

திறமைசாலி...

மிகவும் திறமையான விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் திறமை படைத்த பெண்மணியாகவும் இருப்பவர் ஜியனோட்டி. அதை விட முக்கியமாக நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர் இவர்.

2வது இடம்...

2வது இடம்...

கடவுள் துகள் குறித்த அறிவிப்புப் பேட்டியின்போதும் கூட இவர் சர்வதேச செய்தியாளர்களைக் கவர்ந்தவர். 2012ம் ஆண்டு டைம்ஸ் இதழ் இவரை சர்வதசே அளவில் புகழ் பெற்ற மனிதர்கள் வரிசையில் 2வது இடம் கொடுத்து சிறப்பித்தது.

இசை ஆர்வம்...

இசை ஆர்வம்...

ஜியனோட்டியின் தந்தை ஒரு மண்ணியல் நிபுணர் ஆவார். தாயார் கலை மற்றும் இசையில் ஈடுபாடு கொண்டவர். இவருக்கு இயற்பியல் தவிர இசை என்றால் ரொம்பப் பிடிக்குமாம். சமையல் செய்வதும், நடனம் ஆடுவதும் மற்ற பேவரைட்டுகள்.

சமையலிலும்...

சமையலிலும்...

"சமைக்கும் போதும் கூட அதில் இயற்பியலை நாம் காண முடியும். இசை என்பதும் கூட இயற்பியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதுதான் என்று புன்னகையுடன் கூறுகிறார் இந்த விஞ்ஞானி.

English summary
Particle physicist Fabiola Gianotti has become the first woman to head CERN, the organization based in Switzerland that is home to the Large Hadron Collider. She succeeds outgoing director-general Rolf Heuer, who oversaw the laboratory’s operations for the last seven years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X