For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூபிடர் போல 11 மடங்கு பெரிய ராட்சத கிரகம் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ள மிகப்பஎரிய கிரகம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விண்வெளியில் உள்ள கிரகங்கள் குறித்து சர்வதேச அளவில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சர்வதேச விண்வெளி நிபுணர்கள் குழு சூரியனுக்கு அப்பால் மிக அதிக தொலைவில் புதிய ராட்சத கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அந்தப் புதிய கிரகமானது பூமியைப் போன்றே நட்சத்திரக் கூட்டத்தைப் பெற்றிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கிரகம்....

புதிய கிரகம்....

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்தப் புதிய கிரகத்திற்கு எச்.டி. 106906 என பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

11 மடங்குப் பெரியது....

11 மடங்குப் பெரியது....

அந்தப் புதிய கிரகமானது, ஜூபிடர் கிரகத்தை விட 11 மடங்குப் பெரியது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியன்....

சூரியன்....

மேலும், அந்த கிரகத்தின் அருகில் சூரியன் போன்ற நட்சத்திரம் அமைந்திருப்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

புதிய பூமியா....

புதிய பூமியா....

மற்ற கிரகங்களின் அதிவேக சுழற்றியால் சிதறுண்டு இக்கிரகம் உருவாகியிருக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அந்தப் புதிய இந்த கிரகத்தின் அருகே பூமியில் இருப்பதை போன்று நட்சத்திர கூட்டங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

English summary
A massive planet found orbiting a star at a staggeringly great distance is smashing some long-held theories of planetary formation, researchers say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X