For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் "தாய்க் கழகத்திற்கே" திரும்பி வரும் மாபெரும் "வாயு மேகம்"... நிலா மாதிரி 30 மடங்கு பெரியது!

Google Oneindia Tamil News

நாசா: மில்க்கி வே எனப்படும் பால்வழிப் பாதையிலிருந்து விலகிச் சென்ற மாபெரும் வாயு மேகம் ஒன்று, மீண்டும் பால்வழிப் பாதையை நோக்கித் திரும்பி வருகிறதாம். ஸ்மித் கிளவுட் என்படும் இது மிகப் பெரிய வாயு மண்டல மேகமாகும்.

ஸ்மித் கிளவுட், தற்போது எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. அதில் என்னவெல்லாம் தற்போது அடங்கியுள்ளது என்பதும் தெரியவில்லை.

இது குறித்து நாட்ரடாம் பல்கலைக்கழக விண்வளி இயற்பியல் ஆய்வாளர் நிக்கோலஸ் லெஹனர் மற்றும் அவரது உதவியாளர்கள் குழு ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

சூரியனைப் போலவே...

சூரியனைப் போலவே...

இவர்கள் கூறுகையில், ‘அநேகமாக நமது சூரியனில் உள்ளதைப் போலவே இந்த வாயு மேகத்திலும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இதன் மூலம் சூரியனிலிருந்து இவை உருவாகி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இவர்கள் முன் வைக்கிறார்கள்.

கிரீன் பாங்க்...

கிரீன் பாங்க்...

கடந்த 1960களில் இந்த ஸ்மித் கிளழுட் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த ஆய்வை கிரீன் பாங்க் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

3 கோடி ஆண்டுகளில்...

3 கோடி ஆண்டுகளில்...

நட்சத்திரம் இல்லாத இந்த வாயு மேகமானது ஒரு மணிக்கு 7 லட்சம் மைல்கள் வேகத்தில் பயணிக்கிறது. நமது பால்வழிப் பாதையில் வந்து இன்னும் 3 கோடி ஆண்டுகளில் இது மோதுமாம்.

30 மடங்கு பெரியது...

30 மடங்கு பெரியது...

இந்த வாயு மேகத்திற்கு தெளிவான உருவம் இருந்தால் நமது நிலவைப் போல 30 மடங்கு பெரிதாக இது இருக்குமாம். இந்த வாயு மேகத்தில் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் நிரம்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

3 பால்வழிப் பாதைகள்...

3 பால்வழிப் பாதைகள்...

ஹப்பிள் தொலைநோக்கி மூலம் இதை ஆய்வு செய்து பார்த்தபோது சிறிய அளவிலான ஒளிக் கற்றைகளை இந்த மேகமானது உறிஞ்சுவது தெரிய வந்தது. மேலும் இந்த மேகம் மூலமாக 3 பால்வழிப் பாதைகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

கடின வாயுக்கள்...

கடின வாயுக்கள்...

மேலும் இந்த மேகத்திற்குள் எந்த அளவிற்கு கடினமான வாயுக்கள் இருக்கிறது என்பதை அறியவும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இதன் சல்பர் அளவு ஆராயப்பட்டு வருகிறது. இதை வைத்து அதில் எந்த அளவுக்கு கடின வாயுக்கள் இருக்கின்றன என்பதை அறிய முடியும்.

சல்பர்...

சல்பர்...

நமது பால்வழிப் பாதையின் வெளிப் பகுதியில் சல்பர் அதிக அளவில் உள்ளது. அதேபோல இந்த மேகத்திலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பாதை மாறிய வாயு மேகம்...

பாதை மாறிய வாயு மேகம்...

இந்த வாயு மேகமானது, நமது பால் வழிப் பாதைக்குள்தான் ஒரு காலத்தில் இருந்திருக்கும். 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இது பாதை மாறிப் போயிருக்கலாம். தற்போது மீண்டும் தாய்க் கழகத்திற்கு அது திரும்பி வருவதாக தெரிகிறது.

English summary
it were pristine hydrogen from outside the galaxy. Instead, the cloud appears to have had an intimate relationship with the Milky Way, but was somehow ejected from the outer Milky Way disk about 70 million years ago and is now boomeranging back onto its disk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X