For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவர்தான் ஜப்பானின் “சூப்பர் மேன்”... குடிகார டிரைவர்களை விரட்டிப் பிடிக்கும் "வெட்டுக்கிளி" துறவி!

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் வெட்டுக்கிளி போல் உடையணிந்து குடிகார ஓட்டுனர்களை பிடிக்கும் செயலில் ஈடுப்பட்டு வருகிறார் புத்த துறவி ஒருவர்.

ஷின்ஜிரோ குமாகை, இவர் ஜப்பானின் கிட்டாக்யுஷு நகரத்தில் வசித்து வருகிறார். சுற்றுச்சூழல் கலைஞரான அவர் பழைய அலுமினியம் கேன்களில் இருந்து சிலைகள் செய்யும் வேலை செய்துவருகிறார்.

Giant grasshopper masked biker superhero helps Japanese police catch drink-drivers

அந்த வேலையை முடித்துவிட்டு, 1971 முதல் 1973 ஆண்டுகளில் ஒளிபரப்பாகிய அறிவியல் புனைக்கதை தொலைக்காட்சி ஹீரோவான "காமென் ரைடர் 1" இல் வரும் கதாநாயகன் போல் உடையணிந்து கொண்டு பைக்கில் சென்று குடிகார ஓட்டுனர்களை பிடித்துவருகிறார். இதனால் அந்த பகுதி மக்களால் ஷின்ஜிரோ கொண்டாடப்படுகிறார்.

இது பற்றி அந்த நகரத்தில் கடைவைத்திருக்கும் உமேட்தா என்பவர் கூறும் போது "ஜப்பானில் மிகவும் விரும்பப்படும் காமென் ரைடர் 1 கதாபாத்திரம் போல உடையணிந்து கொண்டு ஷின்ஜிரோ குமாகைமும் செயல்படுவதால் குழந்தைகளுக்கு அவரை மிகவும் விரும்புகிறார்கள்.

அதேசமயம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விழிப்புணர்வும் ஏற்படுகிறது" என தெரிவித்தார்.

ஷின்ஜிரோக்கு அந்த நாட்டு காவல்துறையினர் சிறப்பு அடையாள அட்டை வழங்கியுள்ளனர், அதேபோல் பொதுமக்கள் சிலரும் அவருக்கு பண உதவியும் செய்துவருகிறார்கள்.

English summary
A Japanese artist has an unusual pastime: dressing up as a giant superhero grasshopper to patrol the streets of his native city and protect citizens against drunk drivers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X