For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து ஆணுக்கும்.. இஸ்லாமிய பெண்ணுக்கும் பிறந்த குழந்தை.. அமீரகத்தில் பிறப்பு சான்றிதழ் பெற்று சாதனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து ஆணுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமீரகத்தில் பிறப்பு சான்றிதழ் பெற்று சாதனை

    அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து ஆணுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அந்நாட்டு வரலாற்றில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    கடுமையாக சட்டங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகமும் முக்கியமான ஒரு இடம் உண்டு. முக்கியமாக மத நம்பிக்கைகள் சார்ந்த விதிமுறைகள் அங்கு மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும்.

    அந்நாட்டில் மிகவும் கடுமையான திருமண விதிகளும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அந்நாட்டின் இஸ்லாமிய ஆண் ஒருவர் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை மணக்க முடியும் . ஆனால் இஸ்லாமிய பெண் ஒருவர் வேறு மதத்தை சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்ய முடியாது.

    அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்- கோமதி மாரிமுத்து அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்- கோமதி மாரிமுத்து

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்த நிலையில்தான் சார்ஜாவை சேர்ந்த இந்தியரான கிரண் பாபு என்பவர், கேரளாவை சேர்ந்த சனம் சாபு சித்திக் என்ற பெண்ணை கடந்த 2016ல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2018 ஜூலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தைக்கு அப்போது பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    கிரண் பாபு

    கிரண் பாபு

    இதையடுத்து கிரண் பாபு உடனடியாக நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்தார். ஆனால் நீதிமன்றம் அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து கிரண் உடனடியாக அம்னெஸ்டி அமைப்பை அணுகினார்.

    சட்ட போராட்டம்

    சட்ட போராட்டம்

    இது தொடர்பான சட்ட போராட்டம் கடந்த 5 மாதங்களாக நடந்தது உள்ளது. ஆனால் அவர்களும் பிறப்பு சான்றிதழ் வழங்க முடியாது என்று கைவிரித்துவிட்டனர். இந்த நிலையில்தான் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ''சகிப்புத்தன்மை'' வருடமாக கொண்டாடப்படுகிறது . இதனால் கிரண் பாபு மீண்டும் பிறப்பு சான்றிதழ் கேட்டு வழக்கு தொடுத்தார்.

    சகிப்புத்தன்மை இல்லை

    சகிப்புத்தன்மை இல்லை

    இது சகிப்புத்தன்மை வருடமாக கடைபிடிக்கப்படுவதால் அவரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் அளிக்கப்பட்டது. அந்நாட்டு வரலாற்றில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    இனி வரும் காலங்களில் அந்நாட்டு தலைமை நீதிபதியிடம் இதுபோன்ற குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க அனுமதி பெற வேண்டும் என்று அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது .

    English summary
    Girl Born to Hindu Father and Muslim Mother gets Birth Certificate for the first time in the history of UAE.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X