For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஎம்எப்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான இந்தியப் பெண்! சாதித்த கீதா கோபிநாத்!

இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின்(ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார வல்லுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின்(ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தற்போது அதன் தலைமை பொருளாதார இயக்குனராக இருக்கும் மவுரிஸ் ஓப்ஸ்பெல்ட் ஓய்வு பெற இருக்கிறார். அதை தொடர்ந்து 2018 இறுதியில் கீதா பதவி ஏற்க இருக்கிறார்.

சர்வதேச பன்னாட்டு நிதியம் என்பது உலகின் மிகவும் வலுவான நிதி அமைப்பு ஆகும். உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து இந்த அமைப்பு ஆராயும்.

[ ஏசியில் மின்கசிவு.. மூச்சுத்திணறி 3 பேர் பலியான பரிதாபம்.. கோயம்பேட்டில் பரபரப்பு ]

யார் இவர்

யார் இவர்

கீதா கோபிநாத் கொல்கத்தாவில் பிறந்தவர். 1971ல் பிறந்த இவர் அமெரிக்க குடியுரிமையும் வைத்து இருக்கிறார். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராகவும் இருக்கிறார். சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் இயக்குனராகும் மூன்றாவது பெண் இவர்தான்.

டெல்லியில் வளர்ந்தார்

டெல்லியில் வளர்ந்தார்

இவர் டெல்லியில்தான் படித்து வளர்ந்து இருக்கிறார். டெல்லி ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸில் படித்துள்ளார். அதன்பின் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் பிஎச்டி படித்து இருக்கிறார். தி அமெரிக்கன் எக்கனாமிக் ரீவ்யு என்ற பிரபல இதழிலும் துணை எடிட்டராக இருக்கிறார்.

கேரளா ஆலோசகர்

கேரளா ஆலோசகர்

இவர் கேரளா மாநில பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார். அதேபோல் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்பின் துணை இயக்குனராகவும் உள்ளார். மேலும் பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டனில் சில காலம் பணியாற்றி உள்ளார்.

இரண்டாவது ஆள்

இரண்டாவது ஆள்

இவர் இந்தியாவில் இருந்து இந்த பொறுப்பிற்கு தேர்வாகும் இரண்டாவது நபர் ஆவார். இதற்கு முன் முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுமாராம் ராஜன் இந்த பொறுப்பிற்கு தேர்வாகி இருந்தார். இது இந்தியாவிற்கு பெருமை அளிக்க கூடிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Gita Gopinath appointed as International Monetary Fund Chief Economist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X