For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டிறைச்சி, குங்குமப்பூ.. தங்க இலையில் பர்கர்.. விலை ஜஸ்ட் ரூ. 1.2 லட்சம்தான்!

Google Oneindia Tamil News

லண்டன்: மாட்டிறைச்சி, குங்குமப்பூ போன்றவை கலந்து உலகிலேயே விலையுயர்ந்த பர்கரை இங்கிலாந்து ஓட்டல் ஒன்று தயாரித்துள்ளது. அதன் விலை ரூ. 1.2 லட்சம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ளது செல்சியா என்ற ஓட்டல். இங்குள்ள சமையல் நிபுணர்கள் ஒன்று சேர்ந்து பிரத்யேகமாக பர்கர் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

இதில் ‘கோபே வாஜ்யூ' இன மாட்டிறைச்சி, ஈரான் குங்குமப்பூ, அளவிலான கொழுப்பு சத்துள்ள நியூசிலாந்து உணவு பொருட்கள் உள்ளிட்டவை கலக்கப்பட்டுள்ளன. இந்த பர்கரைத் தயாரிக்க 3 வார காலங்கள் ஆனதாம்.

மேட்சா ரக பன்...

மேட்சா ரக பன்...

இந்த பர்கரில் பயன்படுத்தப்பட்டுள்ள பன்ரொட்டி ஜப்பானின் மேட்சா ரகத்தை சேர்ந்தது. இதன் மேல்பகுதி தங்க இலைகளால் வேயப்பட்டுள்ளது.

14 வகை உணவுப் பொருட்கள்...

14 வகை உணவுப் பொருட்கள்...

மேலும், இந்த பர்கரில் 14 வகை உணவுப் பொருட்கள் சேர்க்கப் பட்டுள்ளதாக செல்சியா ஓட்டல் சமையல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக விலை...

அதிக விலை...

பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த பர்கனின் விலை ஒரு லட்சத்து இருபதாயிரம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே விலை உயர்ந்த பர்கர் என்ற சிறப்பை இது பெற்றுள்ளது.

போட்டி...

போட்டி...

அதிக விலை நிர்ணயிக்கப் பட்ட போதும், இந்த பர்கரை இலவசமாக பெற ஓட்டல் நிர்வாகம் போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது.

English summary
A Chelsea restaurant in west London called Honky Tonk has created the world's most expensive burger embellished with gold leaf and caviar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X