For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் உள்பட பல யூஸர்களை கொன்ற ஃபேஸ்புக்

By Siva
Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட கோளாறால் அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் உள்பட பலர் இறந்துவிட்டதாக அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் தவறுதலாக தெரிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட கோளாறால்(glitch) பல யூஸர்களின் பக்கங்களில் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கும் ஒருவர்.

Glitch in Facebook kills Mark Zuckerberg

இதை பார்த்த பலரும் அடடா மார்க் இந்த வயசில் அநியாயமாக இறந்துவிட்டாரே என்று ஃபீல் செய்தார்கள். தாங்கள் இறந்துவிட்டதாக ஃபேஸ்புக் அறிவித்ததை பார்த்த பலரும் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம், ஆனால் ஃபேஸ்புக் எங்களை கொன்றுவிட்டது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் நிர்வாகம் பிரச்சனையை கண்டுபிடித்து சரி செய்துவிட்டது. மேலும் நடந்த தவறுக்காக ஃபேஸ்புக் யூஸர்களிடம் நிர்வாகம் மன்னிப்பும் கேட்டுள்ளது.

இருப்பினும் ஃபேஸ்புக் கோளாறால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர்களின் நண்பர்களும், குடும்பத்தாரும் சிறிது நேரம் அதிர்ச்சி அடைந்தனர்.

English summary
A glitch in Facebook made it announce millions of users including founder Mark Zuckerberg dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X