For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடூர கொரோனா.. உலகத்தில் 3 லட்சம் பேருக்கு பாதிப்பு.. ஒரு நாளில் 1344 பேர் பலி

Google Oneindia Tamil News

ஜெனிவா: கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 3லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் 1344 பேர் பலியாகி உள்ளது. ஸ்பெயினில் ஒரே நாளில் உயிரிழப்பு 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

Recommended Video

    48 மணி நேரத்தில் 100 பேருக்கு பாதிப்பு... இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

    இதே 22ம் தேதி தான் உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதல் முதலாக பாதிப்பை ஏற்படுத்தியதாக சீனாவில் அறியப்பட்டது ஆம் கடந்த ஜனவரி 22. அன்று சீனா, சார்ஸ் போன்ற கொரோனா வைரஸ் தனது நாட்டை தாக்கியிருப்பதை உலகுக்கு அறிவித்தது. அடுத்த 10 நாளில் 20 ஆயிரம் பேருக்கு சீனாவில் பரவியது. அதன்பிறகு அடுத்த ஒரு வாரத்தில் அதாவது பிப்வரரி 9ம் தேதி 40 ஆயிரமாக அதிகரித்தது.

    அத்துடன் சீனர்கள் எந்த நாட்டுக்கு எல்லாம் சென்றார்களோ அல்லது சீனாவில் இருந்து எந்த நாட்டுக்கு யார் யார் எல்லாம் சென்றார்களோ அவர்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. கிட்டதட்ட மார்ச் 6ம் தேதிக்குள் ஒருலட்சம் பேருக்கு பரவியது. அதன்பிறகு அதன் வேகம் 3 மடங்ககு அதிகரித்துள்ளது. இப்போது வெறும் இரண்டு வாரத்தில் புதிதாக 2லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதாவது 90 நாட்களுக்குள் (மார்ச் 21) 30536 பேருக்கு பரவி உள்ளது.

    9943 பேர் கவலைக்கிடம்

    9943 பேர் கவலைக்கிடம்

    இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 108909 பேர். கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 193042 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 9943 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 13071 பேர் உயிரழந்துள்ளார்கள்.

     4825 பேர் பலி

    4825 பேர் பலி

    உலகிலேயே மிக அதிகமான உயிரிழப்பு என்பது இத்தாலியில் ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 4825 பேர் உயிரிழந்துள்ளனர். 53578 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது அங்கு இதுவரை 3261 பேர் உயிரிழந்துள்ளனர். 81054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 6 பேர் இறந்துள்ளார்கள்.

    1381 பேர் உயிரிழப்பு

    1381 பேர் உயிரிழப்பு

    இத்தாலிக்கு அடுத்தபடியாக தற்போது ஸ்பெயினில் உயிரிழப்பு படுவேகமாக அதிகரித்துவருகிறது. ஒரே நாளில் 32 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 1381 பேர் உயிரிழந்துள்ளனர். 3076 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 28572 பேர் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் இதுவரை 1685 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். ஒரு நாளில் 129 பேர் இறந்துள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி 20610 பேர் மொத்தமாகப பாதிக்கப்பட்டுள்ளனர்.. ஒரே நாளில் புதிதாக 1028 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    அமெரிக்காவில் கடும் பாதிப்பு

    அமெரிக்காவில் கடும் பாதிப்பு

    அமெரிக்காவில் புதிதாக 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 348 பேர் உயிரிழந்துள்ளனர். 26900 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 2693 பேருக்கு பரவி உள்ளது. ஜெர்மனில் 22033 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. அங்கு 84 பேர் இறந்துள்ளனர். பிரான்ஸில் 14459 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. 562 பேர் பிரான்சில் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளார்கள்.

    இந்தோனேஷியா

    இந்தோனேஷியா

    மலேசியாவில் 1306 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 123 பேருககு புதிதாக கொரோனா வைரஸ் இன்று பரவி உள்ளது. அந்த நாட்டில் இதுவரை கொரோனாவால் 10 பேர் இறந்துள்ளார்கள். இன்று மட்டும் இரண்டு பேர் இறந்துள்ளார்கள். இந்தோனேஷியாவில் 10 பேர் இதுவரை இறந்துள்ளார்கள். இன்று 64 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 514 பேர் கெரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Global death toll tops 13,000; Iran's death toll from the coronavirus hits 1,685 : Malaysia, Indonesia registers 10 deaths each
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X