For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 கோடியைத் தாண்டியது உலக அகதிகளின் எண்ணிக்கை – ஐநா தகவல்

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக அளவில் அகதிகளின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Global Refugee Population Surging Amid Conflicts, Persecution: U.N.

இன்று உலக அகதிகள் தினம்... இந்த நாளின்படி, தங்களது வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வெளியேறி, உலகெங்கிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 5 கோடியே 20லட்சத்தை தொட்டுள்ளதாக ஐநா சபையின் அகதிகள் பராமரிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை இப்போதுதான்முதன்முறையாக அதிக அளவில் உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அந்த செய்தியானது, 2012இல் 4 கோடியே 90 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை, சிரியாவில் நிகழும் உள்நாட்டுப் போரின் விளைவாக பெருமளவு அதிகரித்து விட்டதாக குறிப்பிடுகிறது.

ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவிவரும் சூழ்நிலையே இந்த எண்ணிக்கை பெருக முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.

பாகிஸ்தான், ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் மற்ற நாடுகளை விட அதிக அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The number of people displaced by bloody conflict and persecution has exceeded 50 million for the first time since post-World War II era — a vast population roughly equal to that of South Africa or South Korea, according to a new report from the United Nations refugee agency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X