For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபாச இணையதளகளுக்கு ஆப்பு வைக்கும் கூகுள் - விரைவில் 'டெலீட்' செய்கிறது!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரபல இணையதள தேடல் பொறியான கூகுள் தனது ஆர்ச்சீவ்ஸ் பட்டியலில் இருந்து ஆபாச இணையதளங்களை விரைவில் நீக்க முடிவு செய்துள்ளது.

கூகுள் இணையதளத்தில் தகவல்களைத் தேடுவோரின் அனுமதியில்லாமல் பாலியல் ஆபாசப் படங்கள் கொண்ட இணைய தளங்கள் தோன்றுவது குறித்து இணையதள வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

Google to Put a Stop to Revenge Porn, Remove It If Reported

இந்நிலையில் கூகுள் நிறுவனம் இது போன்று பாலியல் காட்சிகள் புகைப்படங்கள் தோன்றுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென கூகுள் பக்கத்தின் விளிம்பு பகுதியில் பிரத்யேக புகார் பக்கம் திறக்கப்படும். அதில், ஆபாசப் படங்கள் குறித்து புகார் செய்யலாம்.இதன் பிறகு அந்த படங்கள் நீக்கப்பட்டுவிடும். இதன் மூலம் ஆபாச தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்படும்.

இது தொடர்பாக கூகுள் தனது வலைப் பக்கத்தில், " தனிப்பட்ட நபர்களின் மீது தாக்குதல் நடத்தி, அவர்களுக்கு மன ரீதியாக சிதைவுகளைத் தரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு இணையதளங்களில் பதிவேற்றப்படும் படங்கள் உறுதியாக நீக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன " என்று குறிப்பிட்டுள்ளது.

English summary
In a statement long overdue, Google has announced that it will start delisting nude or sexually explicit pictures posted online without the person's consent, which are showing up in the company's Image Search results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X