For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கே'... புடினைக் கிண்டலடித்து கூகுள் விட்ட 'டூடுல்' டுமீல்

Google Oneindia Tamil News

டெல்லி: ரஷ்யாவின் குளிர்கால ஒலிம்பிக்ஸ் நேற்று தொடங்கிய நிலையில் ஒரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆதரவாகவும், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினை நக்கல் செய்யும் வகையிலும் தனது டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள்.

ரஷ்ய அதிபர் புடின் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டுள்ளார். அதுதொடர்பாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது எதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கூகுள் இந்த டூடுலை வெளியிட்டுள்ளது.

இந்த டூடுலில் ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் வகையில், அவர்களைக் குறிக்கும் வானவில் நிறங்கள் இடம் பெற்றுள்ளன.

22வது குளிர்கால ஒலிம்பிக்ஸ்:

22வது குளிர்கால ஒலிம்பிக்ஸ்:

குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2014 நேற்று ரஷ்யாவின் சோச்சி நகரில் தொடங்கியது.இது 22ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியாகும்.

ஒலிம்பிக்கின் குறிக்கோள்:

ஒலிம்பிக்கின் குறிக்கோள்:

ஒலிம்பிக்கின் முக்கிய குறிக்கோளே "ஒவ்வொரு தனிமனிதனுக்கும் திறமை இருந்தால் மட்டும் போதும்..விளையாட்டுகளில் பங்குபெற அனைவருக்கும் உரிமை உண்டு. ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள ஈடுபாடு மட்டுமே தேவையான தன்மை"என்பதே ஆகும்.

எல்ஜிபிடி டூடுல்

எல்ஜிபிடி டூடுல்

இதனைக் குறிக்கும் வகையிலும் ,ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான வகையிலும் ஓரினச்சேர்க்கையை குறிக்கும் வானவில் நிறங்களைக் கொண்ட எல்ஜிபிடி டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள்.

வானவில் ஆதரவு:

வானவில் ஆதரவு:

வானவில் நிற கொடியில் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபெறும் ஆறு விளையாட்டுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய மொழி கூகுளிலும் இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.வானவில் நிற கொடியானது ஓரினச்சேர்க்கை மற்றும் திருநங்கைகளை குறிக்க கூடியது.

புடினுக்கு ஆப்பு:

புடினுக்கு ஆப்பு:

ரஷ்ய அதிபர் புடின் ஓரினச்சேர்க்கையாளர்களை எதிர்த்து வருவதோடு குளிர்கால ஒலிம்பிக்கில் அவர்கள் கலந்து கொள்ளவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஆனால்,ஒலிம்பிக் அனைத்து தனிமனித திறமையாளர்களுக்கும் பொதுவானது என்று புடினுக்கு உரைக்கும் வகையில் கூறும்படியாக இந்த டூடுல் உள்ளது.

கூகுளின் பகிரங்க ஆதரவு:

கூகுளின் பகிரங்க ஆதரவு:

இக்குளிர்கால ஒலிம்பிக்கில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கும் பொதுவான மதிப்பை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள்.

நாங்களாம் செம தைரியசாலிங்க:

நாங்களாம் செம தைரியசாலிங்க:

ரஷ்ய அதிபரே ஓரினச்சேர்க்கையை எதிர்த்து வரும் இந்நிலையில் கூகுளின் இக்குசும்பான வேலை நல்ல தீர்வை அளிக்குமா அல்லது சர்வதேச பிரச்சினைகளுக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

புதிய சாதனை:

புதிய சாதனை:

இதற்கிடையே, இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், சுமார் 3000 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது.

வீராங்கனைகள் அதிகம்

வீராங்கனைகள் அதிகம்

இவ்வருடம் புதியதாக இணைக்கப்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டையும் சேர்த்து 98 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.மற்ற ஆண்டுகளை விட இந்த வருடம் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

English summary
On the day of Sochi 2014 Winter Olympics (the 22nd Winter Olympics) in Russia begins, Google has posted a fundamental principle of the Olympic Charter on its home page along with a doodle showcasing six Winter Olympics disciplines presented in the colors of rainbow flag / pride flag, that represents gay pride.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X