For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன சிறைகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்.. செய்வதறியாமல் திகைக்கும் அதிகாரிகள்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்குள்ள சிறைகளில் வேகமாக பரவி வருவது அந்நாட்டு அரசை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

சீனாவில் உள்ள வுகான் நகரத்தில் ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. இந்த வைரஸ் அப்படியே மனிதர்களுக்கும் பரவி வருகிறது.

இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்தேதும் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா... ஒருவர் பலி, ஒரு நாளில் 52 பேருக்கு பாதிப்பு சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா... ஒருவர் பலி, ஒரு நாளில் 52 பேருக்கு பாதிப்பு

உறுதி

உறுதி

இது மேலும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் சீனாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஹூபெய் மாகாணத்தில் உள்ள சிறைகளில் 271-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று

வைரஸ் தொற்று

ஷான்டாங் மாகாணத்தின் ரெஞ்செங் சிறையில் 7 போலீஸார் மற்றும் 200 கைதிகளுக்கும் வைரஸ் பரவியுள்லது. அது போல் ஜெஜியாங் மாகாணத்தில் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹுபெய் மாகாணத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சிறுவனுக்கும் வைரஸ் தாக்குதல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பதவிநீக்கம்

பதவிநீக்கம்

வைரஸ் பாதிப்புக்குள்ளான கைதிகள், போலீஸார் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். நோய் அறிகுறி இருக்கும் நபர்கள் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறைகளில் கொரோனா வைரஸ் பரவும் அளவுக்கு கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

பதவிநீக்கம்

பதவிநீக்கம்

வுகான் மகளிர் சிறை வார்டன், ஷாங்டாங் நீதித் துறை தலைவர், ஷிலிபெங் சிறைத் துறை இயக்குநர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள உறவினர்களை பார்க்க வந்தவர்கள் யாருக்கேனும் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து அது அந்த நபருக்கு பரவி அப்படியே மற்ற சிறை கைதிகளுக்கும் பரவியதாக என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
China Government shocks over Coronavirus spreads in China prisons widely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X