ஞாபகம் இருக்கா.. ட்ரம்ப்பை முறைத்து பார்த்தாரே கிரேட்டா.. மீண்டும் உலக "தலை"அதிர வைக்கும் பேச்சு
ரோம்: 30 வருஷமாக என்ன செய்தீங்க.. இதுவரை என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா? சும்மா பேசிட்டே இருக்காதீங்க.. பருவ நிலை மாற்றம் சம்பந்தமாக உலக தலைவர்கள் அனைவரும் செயல்படுங்கள்.." என்று கிரேட்டா தன்பெர்க் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க்.. 17 வயதாகிறது.. பருவநிலை மாற்றம் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.
திமுகவுக்கு சிக்கல்.. அந்த 3 அமைச்சர்களுக்கு குறி?.. ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட்..அடுத்து என்னாகும்?
தன்னுடைய சிறு வயதில் இருந்தே சமூக ஆர்வலராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சர்வதேச அளவிலான மாநாடுகளில் கலந்து கொண்டு பேசி வருபவர்.

பாதுகாப்பு
எந்த பொது மேடையானாலும் சரி, மாநாடுகள் ஆனாலும் சரி, பகிரங்கமா யாருக்கும் பயப்படாமல் தன் கருத்தை சொல்பவர் கிரேட்டா... ஒவ்வொரு முறையும் தன்னுடைய பேச்சில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக தலைவர்கள் அக்கறை இன்றி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி கொண்டே இருக்கிறார்.. இந்த பேச்சுக்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் வைரலாகும்.

எவ்ளோ தைரியம்
இப்படித்தான், 2 வருடங்களுக்கு முன்பு ஐநா. சபையின் 74வது ஆண்டு கூட்டத்தில் கிரேட்டா பேசிய பேச்சு உலக தலைவர்களை அதிர வைத்தது.. "சுற்றுச்சூழல் ரொம்ப மோசமாக சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது... மக்கள் எத்தனையோ பேர் செத்து கொண்டிருக்கிறார்கள்? ஆனால் நீங்க எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை... இளைய தலைமுறையிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறீங்களே.. உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம்? எங்களை மட்டும் தோல்வியடைய செய்தால், உங்களை எப்பவுமே நாங்கள் மன்னிக்க மாட்டோம்" என்று கிரேட்டா அப்போது பேசியிருந்தார்.

டிரம்ப்
அதுமட்டுமல்ல, இதே மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டு இருந்தபோது, திடீரென உள்ளே என்ட்ரி தந்தார் டிரம்ப்.. மோடியின் உரையை கேட்பதற்காகவே அங்கு அப்போது வந்திருந்தார்... டிரம்ப் உள்ளே நுழைந்ததுமே, ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்த கிரேட்டா அவரை முறைத்து பார்த்தார்.. டொனால்ட் டிரம்ப் மிரண்டு போகும் அளவுக்கு முறைத்து பார்த்தார் இந்த சிறுமி.. இந்த போட்டோ பெருமளவு வைரலானது.

ஆதரவு ட்வீட்கள்
நம் விவசாயிகள் டெல்லியில் போராடி கொண்டிருக்கும்நிலையில், அவர்களுக்கு தொடர்ந்து தன்னுடைய ஆதரவை தந்து வருகிறார் கிரேட்டா.. "வழக்கு தொடர்ந்தாலும் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும்" என்ற கிரேட்டாவின் ட்வீட்கள் மத்திய அரசை கடுப்பாக்கவும் செய்து வருகிறது.

மாநாடு
இந்த நிலையில் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் துவக்க உரையாற்றிய கிரேட்டா பேசும்போது, "பருவ நிலை மாற்றம் குறித்து பேச என்னை போன்ற இளைஞர்களை அழைத்து வந்து மாநாடு நடத்துகிறீர்களே.. ஆனால், நாங்கள் பேசுவதை எதையாவது கவனமாக கேட்கிறீர்களா? இல்லவே இல்லை..

பரபரப்பு
நாங்களும் ஒவ்வொருவரும் பேசுகிறோம், நீங்களும் பேசுகிறீர்கள், 30 வருடங்களாக உலகின் பருவ நிலை மாற்றம் குறித்து பேசிக் கொண்டே இருக்கிறீர்கள்.. என்ன நடவடிக்கை இதுவரை எடுத்திருக்கீங்க என்று சொல்ல முடியுமா? மனிதர்கள் வாழ ஒரே பூமிதான் இருக்கிறது.. இன்னொரு பூமி கிடையாது.. இன்னொரு கோளும் இன்னும் தகுதியுடன் கண்டறியப்படவில்லை.. நமக்கிருக்கும் ஒரே வழி இந்த பூமியை பாதுகாப்பது மட்டும்.. உலக தலைவர்கள் அனைவரும் அதற்கேற்றபடி செயல்படுங்கள்.. சும்மா பேசிட்டே இருக்காதீங்க" என்றார்.. கிரேட்டாவின் இந்த பேச்சுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.