For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தக் "கொரோனா"வைப் பார்த்து இந்த "கொரோனா"வே பயந்துருச்சே.. உற்பத்தியை நிப்பாட்டு.. அதிரடி முடிவு!

Google Oneindia Tamil News

மெக்சிகோ: மெக்சிகோவில் உலக புகழ்பெற்ற கொரோனா மதுபான நிறுவனம் நேற்று முதல் தனது உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

மெக்சிகோவில் சனிக்கிழமை நிலவரப்படி 1600 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. 60 பேர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அவசியமில்லாத தொழிற்கூடங்களை ஏப்ரல் மாதம் வரை மூடுவதற்கு மெக்சிகோ அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் தனது மதுபான உற்பத்தியை நிறுத்தவிருப்பதாக கொரோனா மதுபான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பறக்கும் போன்கால்.. ஒருவரை கூட விடவில்லை.. கொரோனா கண்காணிப்பில் தமிழக அரசு செம.. எப்படி செய்கிறது? பறக்கும் போன்கால்.. ஒருவரை கூட விடவில்லை.. கொரோனா கண்காணிப்பில் தமிழக அரசு செம.. எப்படி செய்கிறது?

மதுபான விற்பனை

மதுபான விற்பனை

ஏற்கெனவே கொரோனா என்ற பெயரால் தங்களது மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வேதனை தெரிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் 38 சதவீதம் பேர் கொரோனா பீரை எந்த சூழலிலும் வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் கொரோனா பீருக்கு வைரஸுடன் தொடர்பிருக்குமோ என ஒரு வித குழப்பத்தில் உள்ளனர்.

பார்லி

பார்லி

இந்த பீரை க்ருபோ மாடெல்லோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆன்யூசர் பூச் இன்பெவ் கூறுகையில் விவசாய தொழில்களின் கீழ் பீர் அத்தியாவசிய பொருளாக பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆண்டுதோறும் மால்டட் பார்லியை பயிரிடுவதன் மூலம் 15 ஆயிரம் குடும்பத்தினர் பலனடைந்து வந்தனர்.

75 சதவீத ஊழியர்கள்

75 சதவீத ஊழியர்கள்

8 லட்சம் மளிகைக் கடைக்காரர்கள் எங்கள் பீரின் விற்பனையை நம்பியே இருந்தனர். மேலும் அவர்களது வருமானத்தில் 40 சதவீதம் இந்த பீர் விற்பனை கொடுத்து வந்தது. அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு, பீரை அத்தியாவசிய வேளாண் தொழில் பொருளாக அறிவித்தால் 75 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற கூறி பீர் தயாரிக்க தயாராக உள்ளோம்.

Recommended Video

    இந்திய பொருளாதாரம் பெருத்த அடி வாங்கும்.. நிபுணர்கள் கருத்து..!
    பீர் வைரஸ்

    பீர் வைரஸ்

    பீரிலிருந்து உற்பத்தியான 3 லட்சம் ஆன்டிபேக்டிரியல் சானிடைசர்களை இலவசமாக அளிக்கிறோம் என்றார். முன்னதாக கொரோனா பீரை வைரஸுடன் ஒப்பிட்டே கூகுளில் தேடல்கள் இருந்தன. அதாவது கொரோனா பீர் வைரஸ், பீர் வைரஸ் என்றே தேடியுள்ளனர். இதுகுறித்து இந்த நிறுவனத்தின் பீர் விற்பனையை அமெரிக்காவில் கவனித்துக் கொள்ளும் கான்ஸ்டெல்லேஷன் பிராண்ட்ஸ் கூறுகையில் பீர் விற்பனை வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. வைரஸுக்கும் எங்களது பீருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்வர் என தெரிவித்துள்ளது.

    English summary
    Amid Coronavirus Pandemic, Grupo Modelo company announced to stop CoronaBeer production.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X