For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிசாட் 18 செயற்கைகோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பிரஞ்ச் கயானா: இந்தியாவின் ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்புக்காக ரூ.1000 கோடி செலவில் இஸ்ரோ உருவாக்கியுள்ள ஜிசாட் 18 செயற்கைகோள் 3404 கிலோ எடை கொண்டது.

40 தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்பட்ட ஜிசாட் செயற்கைகோள் இன்று அதிகாலை 2 மணி அளவில் தென் அமெரிக்க நாடான பிரஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் ஸ்பேஸ் ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

மோசமான வானிலை

மோசமான வானிலை

ஜிசாட் 18 செயற்கைகோளை நேற்று அதிகாலை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான கவுண்டன் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கயானாவில் காற்றின் வேகம் அதிகரித்து மோசமான வானிலை ஏற்பட்டதால் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவது 24 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று அதிகாலை 2 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுடன் தகவல் தொடர்பு சேவைக்காக இந்தியா 15 செயற்கைகோளை ஏவவுள்ளது.

தகவல் தொடர்பு

தகவல் தொடர்பு

ஜிசாட் 18 செயற்கை கோள் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவையான சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை தொடர்ந்து வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3,404 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை தொடர்ந்து வழங்க 48 டிரன்ஸ்பாண்டர்களை கொண்டுள்ளது. இந்த செயற்கைகோள் தற்போது ஜியோசிங்ரோனிம்ஸ் சுற்று வட்ட பாதையில் நிலை கொண்டு சேவை புரிய உள்ளது.

15 ஆண்டுகள் சேவை

15 ஆண்டுகள் சேவை

செயற்கைகோள் தனது சுற்றுவட்ட பாதையை அடைந்தது முதல் இந்த செயற்கைகோள் தனது சேவையை துவங்குகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை தனது சேவையை தொடரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மோடி வாழ்த்து

ஜிசாட் 18 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நம் நாட்டின் வானியல் ஆய்வு சாதனைப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

English summary
India's latest communication satellite GSAT-18 was on Thursday successfully launched by a heavy duty rocket of Arianespace from the spaceport of Kourou in French Guiana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X