For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவுதமாலாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை: வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 25 பேர் உடல் கருகி பலி

கவுதமாலாவில் எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் 25 பேர் உடல் கருகி உயிரிழ்ந்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கவுதமாலாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை-வீடியோ

    கவுதமாலா சிட்டி: கவுதமாலாவில் எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் வெடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 25 பேர் உடல் கருகி உயிரிழ்ந்தனர்.

    கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீட்டர்கள் தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. இதனருகே சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது.

    இங்கு அதிகளவு காபி தோட்டங்கள் உள்ளன. இந்நிலையில், பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது.

    வேடிக்கை பார்த்தவர்கள் பலி

    வேடிக்கை பார்த்தவர்கள் பலி

    இதில் எரிமலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 25 பேர் பரிதாபமாக உடல்கருகி பலியாயினர். முதலில் 6 பேர் மட்டும் பலியானதாக தகவல் வெளியான நிலையில் 25 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
    அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

    வெளியேறும் நெருப்பு குழம்பு

    வெளியேறும் நெருப்பு குழம்பு

    எரிமலையில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவிற்கு செந்நிற, வெப்பம் மிகுந்த நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல், தலைநகர் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியுள்ளன.

    ஓடுபாதை மூடல்

    ஓடுபாதை மூடல்

    எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3,100 பேர் வெளியேறினர். இந்த எரிமலை வெடிப்பினால் லா ஆரோரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு உள்ளது.

    விருந்தினர்கள் மூடல்

    விருந்தினர்கள் மூடல்

    இதேபோல் அங்குள்ள கோல்ப் கிளப்பும் மூடப்பட்டது. அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் விருந்தினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    700 டிகிரி செல்சியல் வெப்பம்

    700 டிகிரி செல்சியல் வெப்பம்

    இந்த எரிமலையில் இருந்து வெளிவரும் லாவாவின் வெப்பம் 700 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்படுகிறது. காற்றில் ஏற்பட்ட மாற்றத்தினால் எரிமலை சாம்பல் தலைநகரின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.

    English summary
    Guatemala volcano erupted kills 25. Over 3000 people evacuated the area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X