For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொத்தமாக அழிந்த கிராமம்.. பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.. கவுதமாலா எரிமலை வெடிப்பு

கவுதமாலாவில் எரிமலை வெடிப்பு காரணமாக, பியூகோ எரிமலை இருக்கும் மொத்த கிராமமே அழிந்து போய் இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கவுதமாலா: கவுதமாலாவில் எரிமலை வெடிப்பு காரணமாக, பியூகோ எரிமலை இருக்கும் மொத்த கிராமமே அழிந்து போய் இருக்கிறது.

கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டி என்ற பகுதியில் இருந்து சுமார் 60 கி.மீட்டர்கள் தொலைவில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. மீட்பு பணிகள் தற்போது அங்கு நடந்து வருகிறது.

கவுதமாலாவில் எரிமலை திடீரென வெடித்ததில் மொத்தம் இதுவரை 106 பேர் பலியாகி உள்ளனர். நேரமாக நேரமாக பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

எவ்வளவு வேகம்

எவ்வளவு வேகம்

இந்த எரிமலை வெடித்த காரணத்தால் புகையும், எரிமலை குழம்பும் வேகமாக பரவியுள்ளது. இதை வேடிக்கை பார்த்த பலர்தான் முதலில் மரணம் அடைந்துள்ளனர். முதல் நாள் வேடிக்கை பார்த்த 25 பேர் மரணம் அடைந்தனர். ஆனால் மீட்பு பணி தாமதமான காரணத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பெரிய

பெரிய

இந்த எரிமலை வெடித்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரம் வரை வானத்தில் பரவியுள்ளது. முதலில் 8 கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த இந்த எரிமலை குழம்புகள் இப்போது பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகை இன்னும் அந்த பகுதியில் இருக்கிறது. அங்கு விமான போக்குவரத்து இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

மொத்த கிராமம்

மொத்த கிராமம்

இந்த எரிமலை வெடிப்பு காரணமாக மொத்த நகரமே அழிந்துள்ளது. பியூகோ எரிமலை இருக்கும் நகரம் மொத்தமும் அழிந்துள்ளது. உலக வரைபடத்தில் அப்படி ஒரு இடம் இருந்ததற்கான தடையமே இல்லாமல் ஆகியுள்ளது என்று இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பது இன்னும் ஒரு வாரம் கழித்துதான் தெரியும்.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

நேற்று மாலை வரை பலி எண்ணிக்கை 69ஆக இருந்தது. ஆனால் தற்போது 106 ஆக உயர்ந்துள்ளது. இதில் நிறைய குழந்தைகள் இருக்கலாம் என்று அச்சம் எழுகிறது. இன்னும் 200 பேர் இந்த அசம்பாவிததால் காணமல் போய் இருக்கிறார்கள். மீட்புப்பணியும் தாமதமாவதால், இன்னும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Guatemala volcano Erupts: Death toll increases to 106 as huge difficult in the rescue operation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X