For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடாவின் டொரோண்டோ நகரில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு.. ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயம்

கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

டொரோண்டோ: கனடா நாட்டில் உள்ள டொரோண்டோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் துப்பாக்கியல் சுட்ட மர்ம நபர் பலியாகியுள்ளார்.

கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள கிரீக்டவுன் அருகே உள்ள கிறிஸ்டினா ரெஸ்டாரண்ட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பத்து மணிக்கு திடீரென ஒரு மர்ம நபர் பொதுமக்களை நோக்கி துப்பாகியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

Gunfire in Toronto; 9 people shot include a child

இந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரும் பலியாகியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அங்கே அருகில் இருந்தவர்கள் கூறுகையில், 25 முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதில் மேலும் சிலர் காயம் அடைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டொரோண்டோவில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் முதல் கட்ட தகவலில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் துப்பாக்கியால் சுட்ட பிறகு அவராகவே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை யார் நடத்தியது, எதற்காக நடத்தப்பட்டது, இதில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து டொரோண்டோ போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

English summary
Gunfire in Toronto city at least 9 people shot include a child. and gunman also dead. victims may be increased news source said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X