For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி; ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்பு !

By Karthikeyan
Google Oneindia Tamil News

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள வணிக வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் படுகாயம் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா இன மக்கள் அதிகமுள்ள உள்ள பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரிய நபர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Gunmen attack shopping mall in Baghdad; 10 killed

மேலும், அங்குள்ள பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தான். இதையடுத்து தகவல் அறிந்த ஈராக் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் கொல்லப்பட்டார். இதையடுத்து பிணைக் கைதிகள் அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இச்சம்பவத்திற்குபின் முக்தாதியா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேரும், பாக்தாத் புறநகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு குண்டு வெடிப்பில் 7 பேரும் கொல்லப்பட்டனர்.

English summary
iraqi officials say gunmen have stormed a mall in a mainly Shiite neighborhood in eastern Baghdad, killing at least 10 people and taking hostages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X