For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் துப்பாக்கிச் சூடு... பலி எண்ணிக்கை 58- ஆக உயர்வு; பலர் படுகாயம்

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், மேலும் 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் இசைக் கச்சேரி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் பலியாகி உள்ளனர். 406க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் லாஸ்வேகாஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாஸ்வேகாஸில் ஒரு கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சாலையில் 22 ஆயிரம் பேர் கூடினர்.

Gunshots reported at Mandalay Bay Resort in Las Vegas

அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் 32வது மாடி கட்டிடத்தில் இருந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் மக்கள் ஆங்காங்கே ஓடத் தொடங்கினர். இதில் 58 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 406 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் லாஸ்வேகாஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் மண்டாலே பே விடுதியில் 32-ஆவது மாடியில் இருந்து சாலையோரத்தில் திரண்டவர்களை நோக்கி சுட்டுள்ளார். அந்நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அவர் ஒரு அமெரிக்கர் என்றும் அவரது பெயர் ஸ்டீபன் பாடக் (64) என்பதும் தெரியவந்துள்ளது.

Gunshots reported at Mandalay Bay Resort in Las Vegas

காயமடைந்தோரில் பலரும் கவலைக்கிடமாக இருந்ததால், இதனால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இத் தாக்குதலைத் தொடர்ந்து லாஸ்வேகாஸில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

English summary
Multiple victims were being transported to hospitals after a shooting late Sunday at a music festival on the Las Vegas Strip.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X