For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

100 பெண்களை பலாத்காரம் செய்த ஜிம்னாஸ்டிக் டாக்டருக்கு 60 ஆண்டு சிறை - அமெரிக்க கோர்ட் தீர்ப்பு

அமெரிக்காவில் ஒலிம்பிக் வீராங்கனைகள் உட்பட 100 பெண்களை பலாத்காரம் செய்த ஜிம்னாஸ்டிக் டாக்டருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    100 பெண்களை பலாத்காரம் செய்த ஜிம்னாஸ்டிக் டாக்டருக்கு 60 ஆண்டு சிறை-அமெரிக்க கோர்ட் தீர்ப்பு- வீடியோ

    மிச்சிகன்: ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் உட்பட 100 பெண்களை பலாத்காரம் செய்த டாக்டருக்கு 60 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து மிச்சிகன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    அமெரிக்கவில் ஒலிம்பிக் அணியில் இருக்கும் லார்ரி நாசர்,54 அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். சிறுமிகளை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்ததாகவும் இந்த டாக்டர் மீது புகார் உள்ளது.

    டாக்டர் லார்ரி நாசருக்கு 3 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஒரு வழக்கிற்கு 20 ஆண்டுகள் வீதம் வழக்கிற்கு 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

    ஜிம்னாஸ்டிக் டாக்டர்ர்

    ஜிம்னாஸ்டிக் டாக்டர்ர்

    ஜிம்னாஸ்டிக் கடினமான விளையாட்டு என்பதால் இந்த விளையாட்டில் தகுதி பெற வேண்டுமானால் ஒலிம்பிக் விதிகளின் படி உடல் திறனில் தேர்ச்சி பெற வேண்டும். ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தங்களுக்கு தனி மருத்துவர்களை நியமித்து உடல் தகுதி சோதனைகளை ஆய்வு செய்து ஒலிம்பிக் சங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    பாலியல் தொந்தரவு

    பாலியல் தொந்தரவு

    அமெரிக்க ஜிம்னாஸ்டிக் பிரிவு மருத்துவராகநியமிக்கப்பட்ட லார்ரி நாசர் தன்னிடம் உடல் பரிசோதனைக்கு வந்த 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

    வீராங்கனைகள் மன உளைச்சல்

    வீராங்கனைகள் மன உளைச்சல்

    டாக்டரின் செயல் பல இளம் வீராங்கனைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால் ஓலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமே என்று அமைதி காத்தனர் பல இளம் சிறுமிகள். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று தெரியாமல் தவித்தனர். ஆனால் தைரியமாக முன் வந்தார் மெகய்லா மரோனி.

    மெகய்லா மரோனி வழக்கு

    மெகய்லா மரோனி வழக்கு

    சிறுமிகளை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி சித்ரவதை செய்ததாக, 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மெகய்லா மரோனி, மிச்சிகன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    நீதிபதி அதிரடி தீர்ப்பு

    நீதிபதி அதிரடி தீர்ப்பு

    ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கே பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. டாக்டரின் முகத்திரை கிழிந்தது. பலரும் சாட்சியம் அளிக்க முன் வந்தனர். வழக்கை விசாரித்த மிச்சிகன் மாவட்ட நீதிபதி ஜானெட் நெப் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

    டாக்டருக்கு 60 ஆண்டு சிறை

    டாக்டருக்கு 60 ஆண்டு சிறை

    டாக்டர் லார்ரி நாசருக்கு 3 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஒரு வழக்கிற்கு 20 ஆண்டுகள் வீதம் வழக்கிற்கு 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தார். நீதிபதி தீர்ப்பை வாசித்த போது சலனமற்று இருந்தார் டாக்டர் லார்ரி.

    தண்டனை அதிகரிக்கும்

    தண்டனை அதிகரிக்கும்

    பலாத்காரத்துக்கு ஒத்துழைக்காத இளம்பெண்கள் மீது லார்ரி தாக்குதல் தொடுத்துள்ளார். தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு ஜனவரி மாதம் வெளியாகிறது. இதனால் லார்ரி தண்டனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற கயவர்களின் முகத்திரையை கிழித்தால் மட்டுமே பலருக்கும் நீதி கிடைக்கும் என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.

    English summary
    Dr. Lawrence G. Nassar, a former team doctor for U.S.A. Gymnastics who has pleaded guilty to sexually abusing gymnasts under the guise of medical treatment, was sentenced on Thursday to 60 years in prison on child pornography charges.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X