For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹெச்-1பி விசா மசோதா தாக்கல்.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு நெருக்கடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஹெச்-1பி விசா கட்டுப்பாடு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேறினால் இந்தியாவை சேர்ந்த ஐ.டி நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

'உயர் திறமை ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மை சட்டம் 2017' என்ற பெயரிலான இந்த சட்ட மசோதாவை கலிபோர்னியாவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரான ஜூ லொப்க்ரென் இந்த மசோதாவை இன்று அறிமுகம் செய்தார்.

H-1B Visa Bill Introduced In US

இந்த மசோதாபடி, இனிமேல் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு தொழில் நிமிர்த்தமாக வரும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி விசாவுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

  • ஹெச்-1பி விசா பெற வேண்டுமானால், அந்த ஊழியருக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 130,000 டாலருக்கு மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
  • இப்போதுள்ள நடைமுறைப்படி இந்த ஊதியம் 60,000 அமெரிக்க டாலராக உள்ளது. 1989ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் இது.
  • புதிய ஹெச்-1பி விசா சட்ட மசோதாவால் அதை பெற வேண்டுமானால், அந்த ஊழியர்கள் தற்போதுள்ள ஊதியத்தைவிட இரட்டை மடங்குக்கு மேல் ஊதியம் பெற வேண்டும். இதனால் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்லும் செலவு அதிகரிக்கும் என்பதால் நிறுவனங்கள் அமெரிக்காவிலுள்ள உள்ளூர் பணியாளர்களையே அந்த பணிக்கு நியமித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
  • மொத்த ஹெச்-1பி வினியோகத்தில் 20 சதவீதம், இனிமேல் சிறு, புது நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும். அதாவது 50 அல்லது அதற்கு குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்காக இந்த 20 சதவீத ஹெச்-1பி விசாக்கள் ஒதுக்கப்படும். இதனால் பெரிய நிறுவனங்களுடன் சிறு நிறுவனங்கள் போட்டியிட முடியும் என்கிறார் ஜூ லொப்க்ரென்.
  • திறமையான ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்க இந்த மசோதா வழி செய்யும் அதேநேரத்தில், மோசடியாக ஊழியர்களை அழைத்துவரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடிவாளம் போடப்படும் என்கிறார் ஜூ லோப்க்ரென். இந்த சட்ட மசோதா நிறைவேறினால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English summary
A legislation has been introduced in the US House of Representatives which among other things calls for more than doubling the minimum salary of H-1B visa holders to $130,000, making it difficult for firms to use the programme to replace American employees with foreign workers, including from India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X