For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எச்.1பி விசா தற்காலிக நிறுத்தம்.. இந்தியர்களுக்கு கடும் பாதிப்பு!

எச்.1பி விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டுக்காரர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போதே அமெரிக்காவில் வாழும் தென் அமெரிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தடாலடியாக பேசி எதிர்ப்பை சந்தித்தவர்.

தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுவிட்டார். கேட்கவா வேண்டும். தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் கொடுக்க தொடங்கி விட்டார்.

இஸ்லாமிய நாடுகளுக்கு தடை

இஸ்லாமிய நாடுகளுக்கு தடை

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற உடன் 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற தடைவிதித்தார். அவர்கள் அமெரிக்கா வந்து செல்வதற்கும் 6 மாதத்துக்கு தற்காலிக தடையை ஏற்படுத்தினார்.

 ஐ.டி. இந்தியர்களுக்கு பாதிப்பு

ஐ.டி. இந்தியர்களுக்கு பாதிப்பு

இதனைத் தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து பணிபுரியும் ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார் டிரம்ப். அமெரிக்காவில் ஐ.டி. துறையில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்கள்.

 எச்1பி விசா

எச்1பி விசா

ஐ.டி ஊழியர்களை குறித்து வைத்து தற்போது டிரம்ப் எச்1 பி விசாவிற்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஐ.டி. துறையில் உள்ள வெளிநாட்டுக்காரர்களின் ஆதிக்கத்தை நிறுத்தவும், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவும் டிரம்ப் இந்த நடவடிக்கைகளை செய்த வருகிறார்.

 தற்காலிகம்தான்…

தற்காலிகம்தான்…

வருகிற ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதல் 6 மாதத்துக்கு தற்காலிகமாகத்தான் ‘எச்.1பி' நிறுத்தப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே எச்1பி விசா கேட்டு விண்ணப்பங்கள் அதிக அளவு வந்துள்ளதாகவும், அவற்றை எல்லாம் முடிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், புதிதாக எந்த விண்ணப்பங்களையும் ஏற்க முடியாத நிலை உருவாகியுள்ளதால் தற்காலிக தடை விதித்திருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

English summary
USA announced that H-1B visas have suspended from April 3 for 6 months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X