For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1000 ஹிரோஷிமாக்களை அழிக்கும் வல்லமை படைத்தது வட கொரியா சோதித்த ”ஹைட்ரஜன் குண்டு”!

Google Oneindia Tamil News

டோக்கியோ: வடகொரியா சோதித்துள்ள ஹைட்ரஜன் குண்டானது ஹிரோஷிமாவை அழித்ததை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது என்று அணு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் இரண்டாம் உலக போரின்போது 1945 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 6 ஆம் தேதி அமெரிக்கா போட்ட "லிட்டில் பாய்" என்னும் அணுகுண்டை உலகம் மறக்கவே முடியாது.

இந்த அணுகுண்டால் அந்த நகரமே உருக்குலைந்து போனது. பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக பலியாகினர்.

ஆயிரம் மடங்கு சக்தி:

ஆயிரம் மடங்கு சக்தி:

இந்த அணுகுண்டை விட வடகொரியா நேற்று வெடித்து சோதித்ததாக கூறப்படுகிற ஹைட்ரஜன் குண்டு ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது என அணு வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சூரிய வெடிப்பு:

சூரிய வெடிப்பு:

மேலும், இது தொடர்பாக டோக்கியோவில் உள்ள மீஜி காக்குயின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் மற்றும் அமைதி ஆராய்ச்சித்துறை பேராசிரியர் டாக்காவ் டாக்காஹாரா கூறுகையில், "சூரியனில் என்ன நடக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள்.

மீப்பெரும் ஆற்றல்:

மீப்பெரும் ஆற்றல்:

கோட்பாட்டில் அதன் செயல்பாடுகள் எல்லைகள் அற்றது. அதன் ஆற்றல், மிகப்பெரிய அளவிலானது. அந்த வகையில், ஹைட்ரஜன் குண்டின் தொழில்நுட்பம் மிகவும் அதிநவீனமானது.

அச்சுறுத்தும் சோதனை:

அச்சுறுத்தும் சோதனை:

இது மிகவும் அச்சுறுத்தலானது. இதை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையில் பொருத்தக்கூடிய அளவுக்கு சிறிய வடிவில் தயாரிக்க முடியும்" என குறிப்பிட்டார்.

ஆற்றல் வெளிப்பாடு அதிகம்:

ஆற்றல் வெளிப்பாடு அதிகம்:

அணுகுண்டுகளை பொறுத்தமட்டில் அவை அணுப்பிளவின் அடிப்படையில் செயல்படுவதாகும். ஆனால் ஹைட்ரஜன் குண்டு, அணு கருக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மிகப்பெரும் ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The announcement Wednesday from North Korea that it had carried out a nuclear test brought to the front lines of global attention a phrase not often heard since the Cold War "the H-bomb."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X