For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெச்1-பி விசா மசோதா என்றால் என்ன? முழு விளக்கம் இதோ!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 'உயர் திறமை ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மை சட்டம் 2017' என்ற பெயரிலான விசா சட்ட மசோதாவை கலிபோர்னியாவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரான ஜூ லொப்க்ரென் இந்த மசோதாவை இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்தார்.

இந்த மசோதாபடி, இனிமேல் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு தொழில் நிமிர்த்தமாக வரும் பணியாளர்கள் ஹெச்-1பி விசா பெற வேண்டுமானால், அந்த ஊழியருக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 130,000 டாலருக்கு மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஆண்டு சம்பளம் சுமார் ரூ.88 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறும் ஊழியருக்கு மட்டுமே விசா கிடைக்கும். முன்னதாக இது ரூ.40 லட்சம் என்ற அளவில் இருந்தது. இந்த சட்டம் குறித்த ஒரு பார்வை இதோ:

உயர் திறமை ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மை சட்டம், என்றால் என்ன?

உயர் திறமை ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மை சட்டம், என்றால் என்ன?

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் கலிபோர்னியாவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரான ஜூ லொப்க்ரென் இந்த மசோதாவை இன்று அறிமுகம் செய்தார். இதன்படி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஹெச்1-பி விசா பெற்று பணியாற்ற வருவோரின் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் ரூ.88 லட்சத்துக்கும் குறைவாக இருக்க கூடாது. தற்போதுள்ள ரூ.40 லட்சம் என்ற சம்பள அளவைவிட இது 200 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

இதில் கவனிக்க வேண்டியது, ஜூ லொப்க்ரென் எதிர்க்கட்சியான, ஜனநாயக கட்சியை சேர்ந்தவராகும். கலிபோர்னியாவில்தான் உலக புகழ் பெற்ற சிலிக்கான்வேலி பகுதி உள்ளது. இங்குதான் கூகுள், பேஸ்புக் உட்பட உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் குவிந்துள்ளன.

யாருக்கு பாதிப்பு ஏற்படும்?

யாருக்கு பாதிப்பு ஏற்படும்?

ஆண்டுக்கு 85000 ஹெச்1-பி வகை விசாக்களை அமெரிக்கா வழங்கும். இதில் பெரும்பான்மை விசாக்களை இந்தியர்களே பெறுகிறார்கள். உயர் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்கள், புராஜக்ட் வேலைகளுக்காக அமெரிக்கா செல்லும், ஐடி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.

இந்தியாவில் எந்த மாதிரி பாதிப்பு ஏற்படும்?

இந்தியாவில் எந்த மாதிரி பாதிப்பு ஏற்படும்?

இந்திய பங்கு சந்தையில் ஏற்கனவே இந்த சட்டத்தின் அதிர்வலைகள் வந்து சேர்ந்துவிட்டன. இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ். டெக் மஹிந்திரா மற்றும் ஹெச்சிஎல் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு உயர் படிப்புக்காக செல்ல உள்ள இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தொழில்துறையில் திறமை குறைவுள்ள பணியாளர்களே பணிக்கு கிடைக்கும் நிலை ஏற்படும்.

இந்திய மாணவர்களுக்கு விசா மறுக்கப்படுமா?

இந்திய மாணவர்களுக்கு விசா மறுக்கப்படுமா?

உண்மையிலேயே உயர் கல்விக்காக செல்லும் மாணவர்கள் பாதிப்படைய மாட்டார்கள். அமெரிக்காவில் குடியேற விரும்பும் ஒரே காரணத்துக்கா விசா மறுக்கப்படாது.

இந்த சட்டத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கு என்ன?

இந்த சட்டத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கு என்ன?

ஹெச்1-பி விசா எண்ணிக்கையை குறைக்க ட்ரம்ப் வலியுறுத்தி வந்தாலும் கூட, இதுவரை அதுபோன்ற உத்தரவை அதிபர் பிறப்பிக்கவில்லை. அதேநேரம், இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் ஏழை மட்டும் தேர்ந்தெடுத்து அந்த நாட்டவர்களுக்கு விசா வழங்க தடை விதித்துள்ளார்.

English summary
A Bill aimed at overhauling the work visa program was on Tuesday introduced in the US House of Representatives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X