For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் அரசு இணையதளத்தை முடக்கி இந்திய தேசிய கீதத்தை பதிவேற்றிய ஹேக்கர்கள்!

பாகிஸ்தான் அரசின் இணையதளத்தை முடக்கி அதில இந்திய தேசிய கீதத்தை ஹேக்கர்கள் பதிவேற்றம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் இணையதளத்தை முடக்கி அதில் இந்திய தேசிய கீதத்தை ஹேக்கர்கள் பதிவேற்றம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அரசு இணையதளம் இன்று திடீரென அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அரசு இணையதளத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள் அதில் இந்திய தேசிய கீதத்தை பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் சுதந்திர தின வாழ்த்துகளையும் பாகிஸ்தான் அரசு இணையதள பக்கத்தில் ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். இந்திய கல்வி நிறுவனங்களின் வெப்சைட்டுகள் ஹேக் செய்யப்பட்டு சரியாக 4 மாதங்கள் கழித்து பாகிஸ்தான் அரசு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்பு

நான்கு மாதங்களுக்கு முன்பு

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஐஐடி டெல்லி, ஐஐடி வாரணாச, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக் கழகம் ஆகிய 4 கல்வி நிறுவனங்களில் வெப்சைட்டுகளை முடக்கினர். பாகிஸ்தான் ஆதரவு அமைப்பினரே அவற்றை முடக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ஹேக்ஸர்ஸ் க்ரு

பாகிஸ்தான் ஹேக்ஸர்ஸ் க்ரு

பாகிஸ்தான் ஹேக்ஸர்ஸ் க்ருயூ என பெயர் கொண்ட அந்த ஹேக்கர்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இந்திய அரசையும் இந்திய பாதுகாப்பு படையையும் அவர்கள் வெப்சைட்களில் திட்டியிருந்தனர்.

அழிக்கவும் இல்லை திருடவும் இல்லை

அழிக்கவும் இல்லை திருடவும் இல்லை

மேலும் எந்த தகவலும் அழிக்கப்படவும் இல்லை திருடப்படவும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்த ஹேக்கர்கள் எங்களுடைய தகவல்களை இந்தியர்களுக்கு தெரிவிக்கவே இங்கு வந்திருக்கின்றோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்திய தேசிய கீதம் பதிவேற்றம்

இந்திய தேசிய கீதம் பதிவேற்றம்

இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அரசு இணையதளம் முடக்கப்பட்டு அதில் இந்திய தேசிய கீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Unidentified hackers have posted Indian national anthem and Independence Day greetings on a Pakistani government website on Thursday. The incidents comes almost four months after a Pro-Pakistan group hacked the official websites of four prominent Indian institutes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X