For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

#PrayForJapan .. டோக்கியோவை சிதைக்க வரும் ஹஜிபிஸ் புயல்.. பேய்மழையால் பேரழிவு அபாயம்.. வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    டோக்கியோவை சிதைக்க வரும் ஹஜிபிஸ் புயல்-வீடியோ

    டோக்கியோ: டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஹஜிபிஸ் புயல் காரணமாக மிகப்பெரிய அளவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என்று ஜப்பான் வானிலை மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தை தவிர்ப்பதற்காக 50 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை காலிசெய்துவிட்டு உடனே வெளியேறுமாறும் எச்சரித்துள்ளது.

    ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சனிக்கிழமை மாலை டோக்கியோ அருகே டைபூன் ஹகிபிஸில் நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இந்த புயல் ஏற்கனவே ரக்பி உலகக் கோப்பையை சீர்குலைத்துள்ளது. அங்கு நடைபெற இருந்து ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

    மகாபலிபுரத்தை 3 நாளில் சிங்கப்பூர் போல மாற்றிவிட்டார்கள்.. விக்கிரவாண்டியில் கிண்டல் செய்த ஸ்டாலின்!மகாபலிபுரத்தை 3 நாளில் சிங்கப்பூர் போல மாற்றிவிட்டார்கள்.. விக்கிரவாண்டியில் கிண்டல் செய்த ஸ்டாலின்!

    மோசமான நிலையில் ஆறுகள்

    உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான டோக்கியோ மிகப்பெரிய அச்சுறுத்தலை மழையால் எதிர்க்கொண்டுள்ளது. டோக்கியவை சுற்றியுள்ள ஆறுகள் நிறைந்து வழிவதால் மோசமான அபாயத்தை டோக்கியோ எதிர்கொண்டுள்ளது.

    50 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை

    இதனிடையே ஜப்பான் அரசு இதுவரை அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என்று கண்டறிந்து 2லட்சத்து 66 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளது. மேலும் 50லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    புயல் தாக்கி வருகிறது

    ஜப்பானை இன்று தாக்க உள்ள ஹஜிபிஸ் புயலின் வேகம் 216 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் 100 ஆண்டுகளில் இல்லாத புயல் ஆகும். இந்த புயலின் தாக்கத்தால் பஸ்,கார் உள்ளிட்ட வாகனங்கள் தூக்கிவீசப்படும் அதிர்ச்சி காட்சிகள் டுவிட்டர் பக்கங்களில் வெளியாகி உள்ளது.

    தூக்கி வீசப்படும்

    ஜப்பானை புயல் தாக்க உள்ள நிலையில் பல ஆயிரம் பேர் ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்து டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். அந்த பதிவுகளில் சிலவற்றில் ஒரு வாகனத்தை புயல் பயங்கரமாக தாக்கி சாய்க்கும் காட்சி உள்ளது. இன்னொரு காட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கூரை பறந்து வந்து இன்னொரு மாடியில் தீப்பொறி பற்றியபடி எரிந்து விழுகிறது. கடற்கரையை ஒட்டிய டோக்கியோ நகரம் இந்த புயலில் மிக மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்று அச்சம் நிலவுகிறது. மொத்த டோக்கியா நகரத்தில் மின்சாரம் இல்லை என்று கூறுகிறார்கள். அங்கு உள்ளவர்கள்.

    English summary
    Hagibis storm: Japan issued its highest level of emergency rainfall warnings for Tokyo and many surrounding areas
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X