For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உன் தலையில தீயை வைக்க என்பது இதுதான் போல!

நண்பர்களுடன் பேசும் போது ஒருவரின் நம்பிக்கைக்கு எதிரான நாம் பேசினால் அந்த நண்பர் உன் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்ட என்று நம்மை திட்டுவார். ஆனால் நிஜமானால் எவ்வாறு இருக்கும்?

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கராச்சி: முடிதிருத்தும் கடை ஒன்றில் கத்தரிக்கு பதிலாக நெருப்பை கொட்டி வெட்டினால் எப்படி இருக்கும்? ஆம் பாகிஸ்தானில்தான் அப்படி ஒரு டெரர் கடை இருக்கு.

ஒரு காலத்தில் பெண்களுக்கு மட்டுமே பியூட்டி பார்லர்கள் இருந்தன. அங்கு அவர்களுக்கு மட்டுமே முடி திருத்தம், பேஷியல், அழகுப்படுத்துதல் உள்ளிட்டவற்றை செய்வர். ஆனால் இன்றைய காலகட்டங்களில் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் பியூட்டி பார்லர்கள் வந்துவிட்டன.

அங்கு அவர்களுக்கு முடிதிருத்துவதுடன் மசாஜ் செய்வது, பேஷியல் செய்வது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் ஒருவருக்கு முடிதிருத்த வாங்கும் கட்டணத்தில் நமது பெற்றோர் 10 முறை தங்கள் முடிகளை திருத்தியிருப்பர். சரி அது போகட்டும், விஷயத்துக்கு வருவோம்.

நெருப்பினால் முடிதிருத்தம்

நெருப்பினால் முடிதிருத்தம்

முடிதிருத்தும் கடைகளில் கத்தரிகளால் முடிதிருத்துவதை கண்டிருப்பீர்கள். ஆனால் நமது எதிரி நாடான பாகிஸ்தானில் நெருப்பை கொண்டு முடிதிருத்தும் தொழிலில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆண்கள் விரும்பும் ஸ்டைலில் முடி திருத்திக் கொள்ளலாம் என்கிறார் அந்த முடிதிருத்தும் நிபுணர் ஷாப்குவாத் ராஜ்புட்.

பாதுகாப்பானது

பாதுகாப்பானது

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நெருப்பை கொண்டு முடியை கட் செய்வதால் வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணத்தில் முடியை திருத்திக் கொள்ள முடியும். இதனால் இதுவரை யாருடைய தலைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாதாம்.

சேதமடையாது

சேதமடையாது

இதுபோன்று நெருப்பை கொண்டு திருத்துவதால் முடி சேதமடையாது. நெருப்பு எரியும் ஆனால் அதை வாடிக்கையாளர்கள் உணர்ந்ததில்லை. அந்த அளவுக்கு இது இருக்கும். இதை நானே கற்றுக் கொண்டேன். இதை எவ்வாறு செய்வது என்பதை கூற இயலாது.

மெல்லிய முடிகளுக்கு கூடாது

இந்த நெருப்பு டெக்னிக்கை. அடர்ந்த முடிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மெல்லிய முடிகளை கொண்டுள்ளோருக்கு இந்த முறையை பயன்படுத்தினால் நெருப்பின் தாக்கத்தை உணர்வர். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் என் கடைக்கு வருவதற்கு பயந்தனர். பின்னர் இந்த முறை மூலம் முடிதிருத்தும் வாடிக்கையாளர்களின் முடியை கண்டும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டும் என் கடைக்கு வருகின்றனர் என்கிறார் அந்த பாகிஸ்தான் நாட்டு முடிதிருத்தும் கலைஞர்.

English summary
In Hair cutting shop in Pakistan, an hair stylist Shafqat Rajpoot cuts hair using flame. He says it never touches the scalp of customer and very safe to use.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X