For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூசிலாந்தில் பிறந்தது முதல் புத்தாண்டு: பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஆக்லாந்து: உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2016 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடு வருகின்றனர்.

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக அந் நாட்டு தலைநகர் வெலிங்டனில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

Happy New Year - 2016 has arrived - New Zealand

உலகிலேயே நேரக் கணக்கின் படி, நியூசிலாந்தில் தான் முதன் முதலாக புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி சுமார் மணி 4.30 அளவில் நியூசிலாந்தில் ஜனவரி மாதம் 1ம் தேதி 12 மணி பிறந்துவிட்டது. நியூசிலாந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். நியூசிலாந்தில் புத்தாண்டை ஒட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

ஆக்லாந்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கியுள்ளன. புத்தாண்டை கொண்டாடும் வகையில் அங்குள்ள ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும், அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.

English summary
New Zealand welcomes 2016 with fireworks,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X